Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

ஆராய்ச்சி ( பட விமர்சனம்)

படம்: ஆராய்ச்சி

நடிப்பு: முத்து பாரதி பிரியன், அனீஷ், மனிஷா ஜித், செந்தில் குமாரி, சிசர் மனோகர், வெடிமுத்து

தயாரிப்பு: பேப்பர் பேனா சினிமா முத்து பாரதி பிரியன்

இசை: விசித்ரன்

எழுத்து,  பாடல்கள் – டைரக்ஷன் மேற்பார்வை மற்றும் மருத்துவ திறனாய்வு : வெடிமுத்து

டைரக்ஷன்: ரவி செல்வன்

பி ஆர் ஒ: விஜய முரளி, சத்யா

மனிஷா ஜித், அனிஷ் இருவரும் மருத்துவக் கல்லூரியில் படிக்கி றார்கள் அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக் கின்றனர். கிராமம் ஒன்றில் இவர்கள் முகாம் நடத்த செல்கின் றனர். அங்கு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதுடன் எய்ட்ஸ் பரிசோதனைகளும் நடத்தப்படு கின்றன. ஊர் பஞ்சாயத்து தலைவர் மகன் முத்து பாரதி பிரியன் மனுஷாஜித்தை கண்டு காதல் கொள்கிறார். ஒருதலை யாக காதலித்து  விடாமல் பின் தொடர்கிறார் முத்து பாரதி. இந்நிலையில் முகாமிற்கு வரும்   சிறுமி  ஒருவருக்கு ஊசி போட்டு பரிசோதனைக்கு ரத்தம் எடுக்க மனுஷா ஜித் முயற்சிக்கும்போது அந்த அந்த சிறுமி அடம்பிடிக் கிறார்.  முதலில் நீங்கள் ஊசி போட்டு காட்டுங்கள் பிறகு நான் ஊசி போட்டுக் கொள்கிறேன் என்கிறது.  இதையடுத்து மனிஷா ஜித் தனது கையில் இருந்து ஊசி மூலம் ரத்தம் எடுத்து காட்டி அதை பரிசோதனை குழாயில் செலுத்து கிறார் பின்னர் சிறுமியின் கையில் இருந்து ஊசி மூலம் ரத்தம் எடுத்து அதை இன்னொரு பரிசோதனை குழாயில் செலுத்து கிறார். சிறுமிக்கு எய்ட்ஸ் இருக்கி றதா என்று  பரிசோதனையா ளரிடம் பரிசோதிக்க சொல்கிறார் மனிஷா ஜித்.  சோதனை செய்யும் டெக்னீசியன் சிறுமிக்கு எந்த நோயும் இல்லை ஆனால் மற்றொரு குழாயில் இருந்த ரத்தத்தில் தான் எய்ட்ஸ் கிருமிகள் இருக்கிறது என்று சொல்ல அதைக் கேட்டு மனிஷா ஜித் அதிர்ச்சி  அடைகிறார்  ஏனென்றால் அந்த குழாயில் இருந்தது மனிஷாவின் ரத்தம்தான். இதனால் மனம் வெறுத்து  தற்கொலைக்கு முயல்கிறார். அவருக்கு சீப் டாக்டர் ஆறுதல் கூறி மீண்டும் முகாமுக்கு அனுப்பி வைக்கிறார். தனக்கு எய்ட்ஸ் கிருமிகளை பரப்பியது தன் காதலன் என்று எண்ணி அவன் மீது கோபம் காட்டுகிறார். ஒரு கட்டத்தில் காதலன் விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும்போது மனுஷா ஜித்தான் ரத்தம் கொடுக்க வேண்டி இருக்கிறது.  எய்ட்ஸ் கிருமிகளுடன் இருக்கும் தனது ரத்தத்தை காதலனுக்கு செலுத்த தயங்குகிறார்  ஆனாலும் உயிரை காக்க வேண்டும் என்பதால் ரத்தம் கொடுக்கிறார் எய்ட்ஸ் கிருமி களுடன் செலுத்தப்படும் ரத்தம் காதலனை என்ன செய்தது?  அவருக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?  என்பதை விஞ்ஞான நுணுக்கங் களுடன் கிளைமாக்ஸ் விளக்கு கிறது.

முழுக்க முழுக்க இது எய்ட்ஸ் விழிப்புணர்வு படம் என்றுதான் சொல்ல வேண்டும் அந்த அளவுக்கு விலாவாரியாக அது பற்றி கதையில் விவாதிக்கப்பட்டு இருக்கிறது.  மருத்துவ குறிப்பு ஆலோசனைகள், எய்ட்ஸ் நோய் எப்படி வருகிறது, அதை எப்படி தடுக்கலாம் யாருக்கெல்லாம் எய்ட்ஸ் நோய் வராது என்பது குறித்த முக்கிய விஷயங்களை இப்படத்தின் கதாசிரியர் வெடி முத்து மருத்துவர்களுடன் அலசி ஆராய்ந்து அதனை தானே நடித்து மனதில்  பதியும்படியாக வசனங்கள் மூலம் பேசி புரிய வைத்திருப்பது ஒரு மருத்துவ இன்ஸ்டியூட் சென்று வந்த அனுபவத்தை தருகிறது. இவ்வளவு விரிவாக   பட்டம் பெற்ற டாக்டரால் கூட தமிழில் இப்படி   கூற முடியுமா என்பது சந்தேகம் தான்.  அந்த அளவுக்கு தமிழில் அழுத்தம் திருத்தமாக வெடிமுத்து சொல்லும் ஒவ்வொரு வசனமும் மனதில் பதிகிறது. அவரே ஆராய்ச்சியா ளராகவும் , ஊர் பஞ்சாயத்து தலைவராகவும் இரட்டை வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.
படத்தில் எழுபது சதவீதம் கதை எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றி தான் இருக்கிறது. இதனால படம்  வெறும் டாக்குமென்டரி ஆகிய விடக்கூடாது என்பதற்காக கதையில் 30 சதவீதம் காதலையும் கலந்திருக்கிறார்கள்.  அந்த காதலிலும் ஒரு எய்ட்ஸ் விழிப்புணர்வு வைத்திருப்பது தான் கதையின் ஸ்பெஷல்.

கதாநாயகர்களாக முத்து பாரதி பிரியன், அனீஷ் நடித்திருக்கின் றனர்.
பருத்திவீரன் சரவணன் ஹீரோவாக நடித்த காலத்தில் பார்த்தது போன்ற தோற்றத்தில் முத்து பாரதி பிரியன் அச்சு அசலாக அவரை போலவே தோன்றுகிறார். நடிப்பும் ஓரளவுக்கு சரவணன் நடிப்பை ஒப்பிட வைக்கிறது.

எந்நேரமும் கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு மனுஷாஜித் பின்னால் சுற்றி காதல் வலை விரிப்பதும் அவரிடம் பேசுவதற் காகவே நண்பர்களை எல்லாம் அழைத்துச்  சென்று அவர்களுக்கு சிகிச்சை செய்ய வைப்பதும் காதல் ருசிகரங்கள். நடன் காட்சியில் முத்து பாரதி பிரியன் தேறியி ருக்கிறார்.  நடிப்பில் தான் இன்னும் கவனம் செலுத்தி கதாபாத்திரத்தை உள்வாங்கி அந்த பாத்திரமாகவே மாற வேண்டிய  வித்தையை அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருக் கிறது.

மற்றொரு நாயகனாக வரும் அனிஷ் கொஞ்சம் நெகட்டிவ் சேடிலும் பாத்திரத்தை ஏற்றிருக்கி றார். அது கதைக்கு ஒரு டுஸ்டாக அமைகிறது.

படத்தில்  எதிரொலிக்கும்  வெடி முத்துவின் குரல் ,, வீட்டுக்கு திரும்பிய பிறகும் காதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. ஆராய்ச்சியாளராக வந்து கரகர குரலில் பேசும் அவர் பஞ்சாயத்து தலைவராக அடிக்கும் லூட்டி காமெடி எல்லாமே அவரை வேறு படங்களில் காமெடி கதாபாத்தி ரங்களுக்கு இயக்குனர்கள் தேடப்படும் ஒரு நடிகராக மாற்றி இருக்கிறது. சீக்கிரமே வெடி முத்துவை பல படங்களில் காமெடி வேடங்களில் பார்க்கலாம்.

பேப்பர் பேனா சினிமா சார்பில் முத்து பாரதி பிரியன் தயாரித்தி ருக்கிறார்.

விசித்ரன் இசையில் ஒலிக்கும் அந்த கரகாட்ட பாட்டு மெட்டு தாளம் போட வைக்கிறது.

கதை , திரைக்கதை , வசனம்  பாடல்கள் – எழுத்து .நடித்திருப் பதுடன்  – டைரக்ஷ்ன் மேற்பார்வை மற்றும் மருத்துவ திறனாய்வு  செய்திருக்கிறார் வெடிமுத்து.

இப்படம் தமிழக அரசின் கவனத்துக்கு செல்ல வேண்டும் அரசு இப்படத்தை  கையில் எடுத்து மற்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டால் ஒரு எய்ட்ஸ் விழிப்புணர்வு படத்தை தமிழில் இருந்து தந்த பெருமை கிடைக்கும். இத்தகைய முயற்சிக்கு அரசு  பரிசு தந்து பாராட்ட வேண்டும்.

சிறு படங்களுக்கு தியேட்டர்கள்  கிடைப்பதில்லை என்ற குறை நீண்டு கொண்டே இருக்கிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண அரசே எல்லா ஊர்களிலும்  ஒரு மினி தியேட்டரை கட்டி  சிறு பட்ஜெட்  படங்களை திரையிட்டால் இது போன்ற விழிப்புணர்வு படங்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

படத்தில்  ரிபீட் வசனங்கள் சோர்வை ஏற்படுத்துகிறது. அதனையும்,   படத்தின் நீளத்தை யும் குறைத்தால் ஸ்கிரிப்ட்டுக்கு வேகம்.கிடைக்கும்

ரவி செல்வன் படத்தை கதாசிரியரின் கூற்றுப்படி இயக்கி இருக்கிறார்.

ஆராய்ச்சி – இளவட்டம், முதுவட்டம் அறிய வேண்டிய விஷயம்.

Related posts

Venkat Prabhu, Naga Chaithanya Joining Hands Together in Bilingual

Jai Chandran

Stunt Director Peter Hein debut as Hero

Jai Chandran

Allu Aravind Presents “Thandel First Look Unleashed

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend