Trending Cinemas Now
Uncategorized ஆங்கில செய்திகள் சினிமா செய்திகள் விமர்சனம்

அமீகோ காரேஜ் (Amigo Garage)

படம்: அமீகோ காரேஜ்

நடிப்பு: மாஸ்டர் மகேந்திரன், ஜி. எம். சுந்தர், தசரதி,  ஆதிரா ராஜ், ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல்

தயாரிப்பு: முரளி ஶ்ரீனிவாசன்

இசை: பாலமுரளி பாலு

ஒளிப்பதிவு: விஜய குமார் சோலைமுத்து

இயக்கம்: பிரசாந்த் நாகராஜன்

பி ஆர் ஒ: சதீஷ் (AIM)

பள்ளியில் படிக்கும் மகேந்திர னுக்கும் , ரவுடி தசரதிக்கும் பார் வாசலில் மோதல் ஏற்படுகிறது. கோபமடையும் மகேந்திரன் தசரதியை தாக்குகிறார். இதனால் ஆத்திரமடைந்த தசரதி மகேந்தி ரனை ஒழித்துக்கட்ட முடிவு செய்கிறார். மகேந்திரனின் நண்பர் ஜி எம் சுந்தர் தலையிட்டு மகேந்திரனை தசரதியிடமிருந்து காப்பாற்றுகிறார். ஆனாலும் மகேந்திரனுக்கும் தசரதிக்கும் மீண்டும் மீண்டும் பகை ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் ஜி.எம் சுந்தர் கஞ்சா விற்ற குற்றத்தில் ஜெயிலுக்கு சென்று விட மகேந்திரனை தீர்த்துக்கட்ட தசரதி ரவுடிகளை அனுப்புகிறார். அவரிடமிருந்து தப்பும் மகேந்திரன் தானே ஒரு ரவுடியாக மாறி தசரதி மற்றும் ரவுடிகளை எப்படி பழி வாங்குகிறார் என்பதுதான் கதை.

கமல்ஹாசன் நடித்த சத்யா பட காலத்தில் இருந்து இதுபோல் நிறைய கதைகள் வநதிருந்தாலும் அதனை ஒவ்வொரு முறையும் இயக்குனர்கள் வித்தியாசமாக கையாளும்போது வெற்றியை சுவைக்கிறது அந்த வகையில் அமீகோ காரேஜ் வித்தியாசமாக கையாளப்பட்ட திரைக்கதையால் இறுதிவரை ரசிகர்களை  இருக் கையில் கட்டிப்போட வைக்கிறது.

மாஸ்டர் மகேந்திரனுக்கு ஒரு நல்ல படம் அமையவில்லையே என்ற கவலை மனதுக்குள் இருந்து கொண்டே இருந்தது.. அந்த குறை இந்த படத்தில் ஓரளவுக்கு நீங்கி இருக்கிறது. அவருக்கு ஆக்சன் ஹீரோ கதாபாத்திரத்தை இயக்குனர் கச்சிதமாக வடிவமைத்து அதை அசத்தலாக படமாக்கி மகேந்திரனின் சாக்லேட் பாய் இமேஜை மாற்றியிருக்கிறா.

கிடைத்த வாய்ப்பை மகேந்திரன் நன்கு பயன்படுத்திக் கொண்டி ருக்கிறார்  பள்ளி மாணவனாக சக தோழர்களுடன் லூட்டி அடித்து  ஃபன் செய்கிறார்.

பார்வாசலில் ரவுடியுடன்  மகேந்திரன்  மோதிவிட்டு அவர்கள் கத்தியுடன் விரட்டும் போது உயிருக்கு அஞ்சி பயப்படுவது எதார்த்தம். ஆனால் இந்த துரத்தலே மகேந்திரனையும் ரவுடி வட்டத்துக்குள் இழுத்து விடும் என்ற ஃபார்முலா நூற்றுக்கு நூறு அமலாகி இருக்கிறது.

ரவுடித்தனத்தை கையில் எடுத்ததும் மகேந்திரனின் ஆக்சன் காட்சிகளில் வேகம் கூடி விடுகிறது முகத்தில் வெளிப்படும் கோபம், ஆக்ரோஷமாக வெளிப்படும் ஆக்சன் இரண்டுமே நன்கு வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அவர் காட்டும்
அம்மா சென்டிமென்ட் நெகட்டிவ் ஷேட் இமேஜை கொஞ்சம் குறைக்கிறது.

மகேந்திரனுக்கு காதலிக்க வேறு ஆளே கிடைக்கவில்லையா என்பது போல் தன்னைவிட வயதில் மூத்தவரையும் , கல்யாணம் ஆகி இளவயதில் விதவையான வரையும் காதலிப்பது கதாபாத்திரத்திற்காக சித்தரிக்கப்பட்ட காட்சியாக தெரிகிறது.

ரவுடிசத்தை கைவிடலாம் என்று மகேந்திரன் முயன்றாலும் அதற்கு வழியில்லாமல் திண்டாடும் காட்சிகள் இளவட்டங்களுக்கு ஒரு படிப்பினை.

கதாநாயகி ஆதிரா ராஜ் மென்மை யான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மகேந்திரனின் காதலை ஏற்க முதலில் தயங்குவதும் பின்னர் அவரது உண்மையான காதலை உணர்ந்து தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு அவரை காதலிக்க தொடங்குவதும் இனிமையான தருணங்களாக மாறுகிறது.

ரவுடியாக நடித்திருக்கும் தசரதி அசல் ரவுடித்தனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். காரேஜ் ஓனராக நடித்திருக்கும் ஜி எம் சுந்தர் நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இளைஞருடன் சேர்ந்து கொண்டு அவரும் இளைஞராக மாறி ஜாலியாக ஆட்டம் ஆடி பாட்டு பாடும்போது ஜாலிலோ ஜிம்கானா யூத்தக மாறி விடுகிறார். அவரை வைத்து இயக்குனர் ஒரு டிவிஸ்ட் காட்சி வைத்திருக்கிறார். அது ஷாக் தருகிறது. .

ஶ்ரீக்கோ உதயா, முரளிதரன் சந்திரன், மதன் கோபால், சக்தி கோபால், முரளி கமல் ஆகியோரும் குறிப்பிடும்படி நடித்திருக்கின். றனர்.

முரளி ஶ்ரீனிவாசன் தயாரித்தி ருக்கிறார்.

பாலமுரளி பாலு இசையில் மெலடி மெட்டுக்கள் அவ்வப்போது காதில் தென்றலை வீசுகிறது.

விஜயகுமார் சோலைமுத்துவின் ஆக்ஷன் மூடுக்கு ஏற்ற டார்க் ஷேட் கலர் டோன்கள் அண்டர் கரன்ட் ஆக்ஷனை தக்க வைக்கிறது.

புது இயக்குனர் பிரசாந்த் நாகராஜன் முதல் முயற்சி அவரை நல்ல  இயக்குனராக தேர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

அதுசரி,  அமீகோ கேரேஜ் என்றால் என்ன என்று ஒரு கேள்வி சிலருக்கு தோன்றக்கூடும். ஸ்பானிஷ் மொழியில் அமீகோ என்றால் நண்பர்கள் என்று அர்த்தமாம் அந்த அர்த்தத்தை இந்த தலைப்புக்கு பொருத்திப் பார்த்துக் கொள்ளுங்கள் அப்போது புரியும்.

அமீகோ காரேஜ் – ஆக்சன் பாய்ச்சல்.

Related posts

வாக்கு எண்ணும்‌ நாள்‌ – கட்‌சியினருக்கு கமல்ஹாசன் கடிதம்‌

Jai Chandran

கீர்த்தி சுரேஷ் vs ராதிகா ஆப்தே மோதும் “அக்கா”

Jai Chandran

முதல் டீசருடன் மனதை கொள்ளை கொள்ள வரும் ராம் பொத்னேனி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend