Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

அன்னபூரணி (பட விமர்சனம்)

படம்: அன்னபூரணி

நடிப்பு: நயன்தாரா, சத்யராஜ், ஜெய். கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார், சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார்,  சுரேஷ்

தயாரிப்பு: ஜீ ஸ்டுடியோ, நாட் எஸ் எஸ் ஸ்டுடியோ,  ட்ரைடன்ட் ஆர்ட்ஸ்

இசை: தமன். எஸ்.

ஒளிப்பதிவு: சத்யன் சூரியன்

இயக்கம்: நிலீஷ் கிருஷ்ணா

பி ஆர் ஒ :சுரேஷ் சந்திரா (D’ one) ரேகா

ஶ்ரீ ரங்கம் கோயில் பிரசாதம் செய்து தரும் பிராமண குடும்பத்தில் பிறந்தவர் அன்ன பூரணி ( நயன்தாரா). இவருக்கு சிறு வயது முதலே பைவ் ஸ்டார் ஓட்டல் ஷெப் ஆக வேண்டும் என்று ஆசை. அதற்கான கேட்டரிங் படிப்பில்  சேர எண்ணும்போது பூரணியின் தந்தை தடுக்கிறார். பிராமண குடும்பத்தில் பிறந்து ஷெப் ஆக வேண்டும் என்று எண்ணுவது சரியல்ல. நான் கோயில் பிரசாதம் செய்பவன் அசைவம் என்றாலே பாவம் என்று கருதுபவன்.  நீ ஷெப் ஆக வேண்டு மென்றால்  அசைவம் சமைக்க வேண்டும், அதை ருசி பார்க்க வேண்டும். அதற்கு ஒப்புக் கொள்ள முடியாது என்கிறார். ஆனால் தந்தைக்கு  தெரியாமல் கேட்டரிங் படிப்பில். சேர்கிறார். இது தெரிந்ததும் அவரை அந்த படிப்பிலிருந்து நிறுத்தி திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்கி றார்.  அதை ஏற்காத பூரணி வீட்டிலி ருந்து வெளியேறி  ஸ்டார் ஓட்டலில் ஷெப் ஆகிறார். இந்நிலையில் விபத்தில் சிக்கும் பூரணிக்கு  நாக்கில் சுவை நரம்புகள் பாதிக் கப்படுகிறது. எந்த சுவையும் தெரி யாத நிலையில் இனி ஷெப் ஆக இருக்க முடியாது என்று வருந்துகி றார். ஆனால் அவருக்கு ஷெப் ஆனந்த் (சத்யராஜ்) ஊக்கம் தந்து நம்பிக்கை வரவழைக்கிறார். சிறந்த  ஷெப் தேர்வுக்கான போட்டி நடக்க அதில் பூரணி பங்கேற் கிறார் பூரணியை ஆரம்பத்திலி ருந்தே  எதிர்க்கும் கார்த்திக் குமாரும் போட்டியில் பங்கேற்கி றார். பூரணியை தோற்கடிக்க பல சிக்கலை ஏற்படுத்துகிறார். அதிலி ருந்து மீண்டு எப்படி போட்டியில் பூரணி வெல்கிறார் என்பது கிளை மாக்ஸ்.

பிராமண குடும்பத்தில்.பிறந்து கறி பிரியாணி சமைப்பதுடன் முக்காடு போட்டு தொழுகை நடத்தும் காட்சியில் நடிக்க ஒரு நடிகைக்கு  தைரியம் வேண்டும் அதை படமாக்க இயக்குனருக்கும் தைரியம் வேண்டும் அந்த தைரியம் நயன்தாராவுக்கும் இருந்திருக்கிறது இயக்குனர் நிலீஸ் கிருஷ்ணாவுக்கும் இருந்திருக்கிறது.  அதுதான்  படத்தின் ஹைலைட்டாகவும் நின்று பேசுகிறது. இப்படி எடுத்தால் இந்த அமைப்பினர்  கோபப்படுவார்களோ, அப்படி எடுத்தால் அந்த அமைப்பினர் கோபப்படுவார்களோ என்ற தயக்கத்தை எல்லாம் இயக்குனர் ஓரம் கட்டி வைத்து விட்டு தான் நினைத்ததை துளியும்  காம்ப்ரமைஸ்  செய்து கொள்ளா மல் இயக்கி இருக்கிறார்.

பிராமண குடும்பத்தில் பிறந்த நயன்தாரா சிக்கன் கறியை 8 துண்டாக வெட்டிக்காட்டுவது, பிரியாணி சிக்கன் முட்டையை வாயில் போட்டு சுவைப்பது போன்ற காட்சிகள் தொழில் வேறு,  குடும்ப ஆசாரங்கள் வேறு என்பதை அடித்துத் சொல்லும் நெத்தியடி காட்சிகள்.

சமையல் செய்வது சாப்பிடுவது என்றே காட்சிகளை நகர்த்தி விடுவார்களோ என்று  எண்ணும்  வேளையில் திடீரென்று கார்த்திக் குமாரை நயன்தாராவுக்கு வில்லனாக்கி படத்தில் விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார் இயக்குனர்.

ராஜா ராணி படத்தில் நயன்தாரா விடம் காதலில் தோற்ற ஜெய் இந்த படத்திலாவது  அவரிடம்   காதலில். ஜெயிப்பாரா என்று  பார்த்தால் இதிலும் ஜோடி சேர வாய்ப் பில்லை ராஜா என்றே புலம்ப வைக்கிறார்..

அசைவம் சமைப்பதற்கு பயந்து நயன்தாரா ஒதுங்கும்போது ராமாயணத்தை  மேற்கோள் காட்டும் ஜெய், காட்டுக்கு சென்ற ராமனும் , லட்சுமணனும் காட்டில் வேட்டையாடி அசைவம் சாப்பிட்ட தாக கூறுவது  இதுவரை கேள்வி படாத விஷயமாக தெரிகிறது. இதற்கு மத அமைப்புகள்  என்ன ரியாக்ஷன் தரும் என்பதை பொருத் திருந்துதான் பார்க்க வேண்டும்.

சத்யராஜ் பைவ் ஸ்டார் ஓட்டல் ஷெப் ஆக வந்து நயன்தாரா பாத்திரத்துக்கு துணை நிற்கிறார். கே.எஸ்.ரவிகுமார்,  ரெடின் கிங்ஸ்லி கலகலப்பு வரவழைக்க போராடுகிறார் அச்சுயுத் குமார், சச்சு. ரேணுகா,  சச்சு.சப்பூர்ட்டிங் வேடத்தில் நிறைவு செய்கின்றனர்.

பெண்கள் அடுபங்கரையிலிருந்து வெளியில் வந்து ஆண்களுக்கு சமமாக பணியாற்ற வேண்டும் என்று பலரும் மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கும் இந்நாளில் உலக அளவில்  பெண் ணை சமையல்காரி அதாவது ஷெப் ஆக மாற ஊக்கம் தரும் வகையில் இதில்.இயக்குனர் நிலிஸ்  கருத்து தெரிவித்திருப் பதை எத்தனை மகளிர் அமைப் புகள் ஏற்றுக் கொள்வார்களோ   என்று தெரியவில்லை.

எஸ்.தமன் தெய்வீகம், . மேற்கத் தியம் என   இசையில்  வேறுபாடு காட்டி இருக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு தெள்ளத்  தெளிவு .

படம் நீண்ட  நேரம் ஓடுவது போன்ற ஒரு உணர்வை தவிர்க்க முடியவில்லை. சில காட்சிகளுக்கு எடிட்டர் பிரவின் இன்னமும் கத்தரி போட்டு குறைத்தால் ஸ்கிரிப்பாக இருக்கும்

அன்னபூரணி – அசைவ பூரணி.

 

 

 

 

 

Related posts

மு க ஸ்டாலினுக்கு தியேட்டர் அதிபர் சங்கம் வாழ்த்து -கோரிக்கை

Jai Chandran

Vishal32 Wishing Stunt Choreographer Dhilipaction

Jai Chandran

Victory Venkatesh, Nandamuri Kalyanram Movie gearing up for Sankranthi 2027..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend