படம்: வா வரலாம் வா
நடிப்பு: பாலாஜி முருகதாஸ், மஹானா சஞ்சீவி, காயத்ரி ரேமா, மைம் கோபி, ரெடின் கிங்ஸ்லி, சிங்கம்.புலி, சரவண சுப்பையா, தீபா, வையாபுரி, தீபா, வாசு விக்ரம், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, மீசை ராஜேந் திரன்
தயாரிப்பு: எஸ் பி ஆர்
இசை: தேவா
ஒளிப்பதிவு: கார்த்திக் ராஜா
இயக்கம்: எஸ் பி ஆர், எல்.ஜி.ரவிசந்தர்
பி ஆர் ஒ : வெங்கட்
சிறையிலிருந்து வெளியில் வரும் பாலாஜி முருகதாஸ் , ரெடின் கிங்ஸ்லி இருவரும் உழைத்து சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்து வேலை தேடுகின்றனர். ஜெயிலுக்கு சென்றவர்கள் என்பதால் யாரும் வேலை தர மறுக்கிறார்கள். வேறு வழியில் லாமல் கொள்ளையன் தோட்டா ராஜேந்திரன் (மைம் கோபி)தரும் வேலையை ஏற்று லாரி, பஸ் திருட செல்கின்றனர். 40 குழந்தைகள் வரும் பஸ்சை இருவரும் துப்பாக்கி முனையில் கடத்தி செல்கின்றனர். அந்த பஸ்ஸில் 2 பெண்களும் இருக்கின்றனர். அவர்களை பாலாஜி, ரெடின் காதலிக்க முடிவு செல்கின்றனர். இவர்கள் காதல் என்ன ஆனது. கடத்தப்பட்ட 40.குழந்தைகள் கதி என்ன என்பதற்கு படம் பதில் சொல் கிறது.
ஆக்ஷன், காதல், இசை, குத்தாட்டம், காமெடி என கமர்ஷியல் பார்முளா வுடன் கூடிய படமாக உருவாகி இருக்கிறது வா வரலாம் வா. பிக்பாஸ் புகழ். பாலாஜி முருக தாஸ் ஹீரோவாக நடித்திருக் கிறார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ரெடின் கிங்ஸ்லியுடன் சேர்ந்து கொஞ்சம்.காமெடியும் செய்தி ருக்கிறார். பாலாஜி. வால்வோ பஸ்சை திருடிக் கொண்டு செல்ல எண்ணும்போது பஸ்ஸில் ஏற மஹானா, காயத்ரி வருவதைக் கண்டு இருவரும் காதல் கனவில் மிதப்பதும் பின்னாலேயே 40 குழந்தைகள் வருவதைக் கண்டதும் ஷாக் ஆவதும் வேறு வழியில்லாமல் அவர்கள் எல்லோரையும் கடத்திக் கொண்டு சென்று காட்டு பங்களாவில் அடைத்து பணம் பறிக்க முயலும் போது 40 பேரும் ஆதரவற்ற குழந்தைகள் என்று தெரிந்ததும் சீனே மாறி விடுகிறது.
கிளைமாக்சில் பாலாஜி முருக தாஸ் கட்டு மஸ்தான தோற்றத். துடன் மைம் கோபியுடன் மோதும் போது ஆக்ரோஷம்.காட்டி இருக் கிறார்.
சிங்கம் புலி, தீபா தங்கள் பங்குக்கு காமெடி.செய்கின்றனர். ரவுடிபோல பாவ்லா காட்டும் வையாபுரி கொஞ்ச நேரமே வந்தாலும் காமெடியை.கச்சிதமாக செய்திருக்கிறார். செக்போஸ்ட் இன்ஸ்பெக்டராக வரும் பயில் வான் ரங்கநாதன் காமெடியாக பேசி சிரிக்க வைக்கிறார்.
நீண்ட நாட்களுக்கு.பிறகு தேவா.இசை அமைத்திருக்கிறார். தேனிசை பாடல்களை வழக்கம் போல் தந்திருப்பதுடன் அவரது டிரேட்.மார்க் பாடலான கானாவை யும் தந்து.கவர்ந்திருக்கிறார்.
பாரதிராஜாவின் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கார்த்திக் ராஜா பளிச்சிடும் வகையில் காட்சிகளை பதிவு செய்திருக்கிறார்.
இந்த மீட்டரில்தான் இந்த படம் இருக்கும் என்பதை உணர்த்தும் இயக்குனர் எஸ். பி.ரவிசந்திரன் மீட்டர் மீறாமல்.ரசிக்க வைத்தி ருக்கிறார். இவருடன் இயக்கத்தில் தயாரிப் பாளர். எஸ் பி ஆர் இணைந்து. பணியாற்றியிருக் கிறார்..
வா வரலாம் வா – அட்வைஸ் அழுகாச்சி இல்லாத கமர்ஷியல்.கலவை.