Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மு க ஸ்டாலினுக்கு தியேட்டர் அதிபர் சங்கம் வாழ்த்து -கோரிக்கை

தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்க உள்ள திமுக அரசு திரையரங்கு உரிமையாளர்களின் நலனை காக்கும் வகையில் 8 சதவீத வரியை ரத்து செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர் சங்கத் தலைவர் சக்தி சுப்பிரமணியம் கூறி உள்ளார்.

மேலும் அவர் கூறும்போது ‘தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக பதவி ஏற்கும் தலைவர் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள்.  கடந்த ஒருவருடமாக கொரோனா ஊரடங்கள் தியேட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கரண்ட் பில்,  சொத்து வரி போன்றவரை ரத்து செய்ய வேண்டும். டிக்கெட் மீதான உள்ளூர் வரியும் ரத்து செய்யவேண்டும்.

தலைவர் கலைஞ்ர் முதல்வராக இருந்தபோது பல்வேறு சலுகைகள் அளித்தார்.  தமிழில் பெயர் வைத்தால் எல்லா வரியும் ரத்து என உத்தரவிட்டார். சினிமா தான் தனது தாய்வீடு என்பார்.

திரையுலகம் சார்பில் முதல்வராகும் உங்களுக்கு கொரோனா பாராட்டு விழா நடத்த உள்ளோம் அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்

Related posts

அயோத்தி 50வது நாள்: சசிகுமாருக்கு ரஜினி, சிம்பு பாராட்டு

Jai Chandran

விரூபாக் ஷா (பட விமர்சனம்)

Jai Chandran

AVM Productions forays into OTT with Tamil Stalkers  partners with SonyLIV for the thriller

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend