Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு (பட விமர்சனம்)

படம்: எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு

நடிப்பு: சரத், அயிரா, மதன்,  கஞ்சா கருப்பு, சோனா, நரேன், இளையராஜா,  முத்து,

தயாரிப்பு: எஸ். ஹரி உத்ரா  எஸ். பிரீத்தி சங்கர், ஆர். உஷா

இசை : ஏ. ஜே.அலி மிர்சாக்

ஒளிப்பதிவு: வினோத் ராஜா

இயக்கம்: எஸ்ஹரி உத்ரா

பி ஆர் ஒ: சுரேஷ் சந்திரா

கால் அடிபட்டு கால் பந்தாட்டத்தை தொடர. முடியாமல்.போன வாத்தியார் ஒருவர் கூலி வேலை பார்க்கும் இளைஞர்களை ஒன்று சேர்த்து  கால்பந்தாட்ட.குழு தொடங்கி அவர்களுக்கு பயிற்சி அளித்து மாவட்ட,  தேசிய அளவில்  போட்டிகளில் பங்கேற்க  செய்ய முயற்சிக்கிறார். ஆனால் அந்த ஊர் ரவுடி, தான் நடத்தும் நிறுவனங்களில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் கால்பந் தாட்டம் ஆடச் சென்று விட்டதால் வேலை செய்ய ஆட்கள் பற்றாக் குறை ஏற்பட்டதால்.கோபம் அடை கிறார். கால்பந்தாட்டம் ஆடச் சென்றவர்களை பழி வாங்குகி றார். இதன் முடிவு என்ன என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

படத்தின் முதல்பாதி பற்றி கவலைப் படாமல் 2ம் பாதியிலி ருந்து பார்த்தால் போதும் என்றுதான் சொல்ல வேண்டும்.

கால் பந்தாட்ட குழுவில்  விளை யாடும்  சரத் உள்ளிட்ட இளை ஞர்கள்  எப்படியாவது வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற ஆர்வத்தில் ஆட்டத்தில் தீவிரம் காட்டுவது ஊக்கம் அளிக்கிறது.

வில்லனாக வரும் நரேன் தனது தோற்றத்திலேயே மிரட்டுகிறார். ஆனால் தொடக்க காட்சியில் தன் மகனை கொன்றவனை பற்றி தகவல் சொன்ன பெண்ணை ஏன் வெட்டித் தள்ளுகிறார் என்றுதான் புரியவில்லை.

இளையா கதாபாத்திரத்தில் வரும் இளையாஜா, ஹீரோவாக நடித்திருக்கும் சரத், கால் பந்து பயிற்சியாளர் மதன் வேடத்துக்கு பொருந்தியிருக்கின்றனர்.

ஸ்எஸ். ஹரி உத்ரா  எஸ். பிரீத்தி சங்கர், ஆர். உஷா தயாரித்திருக் கின்றனர்

ஏ. ஜே.அலி மிர்சாக் இசை, வினோத் ராஜா ஒளிப்பதிவு  ஒகே

அதிகாரத்தில் இருப்பவர்கள் ஏழைகளை எப்படி உயர விடாமல் தடுக்கின்றனர் என்ற கருத்தை அழுத்தமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் எஸ். ஹரி உத்ரா. கால் பந்தாட்ட காட்சிகளை இன்னும் சிறப்பாக அமைத்திருந்தால் எடுபட்டிருக்கும்.

எண் 6 வாத்தியார் கால்பந்தாட்ட குழு – பாதி கிணறு தாண்டுகிறது.

Two And A Half Star Rating Illustration Vector

 

 

 

 

 

 

 

 

Related posts

நடிகர் சங்கத்துக்கு நெப்போலியன் 1 கோடி நன்கொடை

Jai Chandran

Sabhaapathy Trailer

Jai Chandran

நடிகர் சங்கத்தின் 67வது பொதுக்குழு கூட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend