Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விக்ரம் 3ம் பாகத்தில் கமலுடன் இணையும் ரஜினிகாந்த்

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து தயாரித்துள்ள படம் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். இப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிபெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது.

இதையடுத்து இப்படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த லோகேஷ் கனகராஜூக்கு  சொகுசு கார்  பரிசளித்தார் கமல். கெஸ்ட் ரோலில் நடித்திருந்த சூர்யாவுக்கு விலை உயர்ந்த கைக்கடிகாரம் பரிசளித்தார்.

இதைத் தொடர்ந்து பத்திரிகை, ஊடகம், இணைய தள நிருபர்களை கமல் ஹாசன்,  இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இணைந்து இன்று  சந்தித்தனர்.  விக்ரம் பட வெற்றிக்கு விமர்சனங்கள் மூலம் உதவியதற்கு நன்றி தெரிவித்தனர்.

அப்போது மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிப்பீர்களா என்று கமலிடம் கேட்டபோது,” ,ரஜினியுடன் இனைந்து பணிபுரிய எப்போதும் தயார்”  என்றார்.

விக்ரம் படத்தின் மூன்றாம் பாகத்தில்படுபயங்கர வில்லனாக ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் சூர்யா நடிக்க உள்ளார்.

கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர் போன்ற படங்கள் பான் இந்தியா படமாக உருவாகி வெளிவந்து வசூல் சாதனை படைத்தது. இந்த இரண்டு படங்களும் பிறமொழி யிலிருந்து தமிழில் டப்பிங் செய்யப் பட்டது. இப்படியொரு பான் இந்தியா  படம்   தமிழில் எப்போதுவரும் என்று எதிர்பார்த்திருந்தவர்களின் ஏக்கத்தை போக்கும் விதமாக கமலின் விக்ரம் படம் வெளியாகி தமிழ் திரையுலகுக்கு பெருமை சேர்த்திருக்கிறது.

விக்ரம் படத்தின் வெற்றி இப்படத்தின் 3ம் பாகத்துக்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது பான் வேர்ல்டு படமாக அமைய வேண்டும் என்று ரசிகர்கள் கூறத்தொடங்கி உள்ளனர். அதற்காக விக்ரம்3 ம் பாகத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பார் என எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

விக்ரம் 2 பாகத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரியாக  ரோலக்ஸ் என்ற கெஸ்ட் ரோலில் சூர்யா  நடித்துபோல் 3ம் பாகத்தில் கெஸ்ட் ரோலில்  ரஜினிகாந்த் நடிக்கலாம் எனவும். இது சூர்யா வேடத்தைவிட பயங்கரமாக இருக்கும் என்றும் பேச்சு எழுந்துள்ளது.

 

Related posts

அமெரிக்காவில் கிரீன் கார்டு வழங்க 60 நாட்கள் தடை..

Jai Chandran

Gautham, AR Rahman collaborate for “Bathukamma” festival song

Jai Chandran

Watch Out Ranbir Kapoor at World Cup Semi final

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend