படம்:பரிவர்த்தனை
நடிப்பு:சுஜித், சுவாதி, ராஜேஸ்வரி, மோஹித், ஸ்னேகா,திவ்யா ஶ்ரீதர், ராயில் கார்த்தி
தயாரிப்பு: எஸ்.மணிபாரதி
இசை:ரிஷாந்த் அர்வின்
ஒளிப்பதிவு: கே. கோகுல்
இயக்கம்: எஸ்.மணிபாரதி
பி ஆர் ஒ: மணவை புவன்
குறைந்த ஜனத்தொகையே கொண்ட அந்த கிராமத்தில் பண்ணையார் விட்டு மகளும், பால்கார வீட்டு மகனும் பள்ளியில் ஒன்றாக படிக்கின்றனர். பருவ மங்கையாகும் அவள் வயதுக்கு வருகிறாள் அப்போதும் இருவரும் நெருங்கி பழகுகின்றனர். இதை பண்ணையார் வீட்டினர் கண்டிக்கின்றனர். மகளுடன் பழகாதே என்று பெண்ணின் தாயார் அடியாள் வைத்து பால்கார வீட்டு பையனை தாக்குகிறார். அவமானம் அடைந்த பால்காரர், மகனை அழைதுக்கொண்டு ஊரை விட்டே செல்கிறார். சில வருடங் களுக்கு பிறகு தோழி ஒருத்தி தனது சிநேகிதியை சந்திக்க கிராமத்துக்கு வருகிறாள். தோழியான பண்ணை வீட்டு பெண் திருமணம் செய்துகொள் ளாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைகிறாள். தோழியிடம் தன்னுடைய காதல் கதையை பண்ணையார் வீட்டு பெண் சொல்கிறாள். அவளை சமாதானப் படுத்தி தன் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் தோழி. சென்ற இடத்தில் பண்ணையார் மகளுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தோழியின் கணவர் தான் தன்னுடைய காதலன் என்பது தெரிய வந்ததும் ஷாக் அடைகி றாள். இந்த விவரம் ஒரு கட்டத்தில் தோழிக்கு தெரிய வருகிறது. அடுத்து அவர்கள் எடுக்கும் முடிவு எதிர்பாராத முடிவாக அமைகிறது.
சமீபகாலமாக கடத்தல் போதை மருந்து, வெட்டு, குத்து என்றுதான் படங்கள் வந்துகொண்டிருக் கின்றன. வயல், கிராமம், குடும்பம் என்று படங்கள் அபூர்வமாகி விட்டது அந்த வகையில் பரிவர்த்தனை கிராமத்து பின்னணியிலான கதையாக உருவாகி இருக்கிறது.
பள்ளி பருவ காதலர்களாக மோஹித், ஸ்மேகா நடித்திருக்கின் றனர். எல்லை மீறாத இந்த ஜோடி களின் காதல் ரசிக்க வைக்கிறது. காதலியை பார்க்கச் சென்று பண்ணை ஆட்களிடம் அடி வாங்கும் மோஹித் பரிதாப்பட வைக்கிறார். குடும்பமே எதிர்த்தப்போதும் மோஹித்தை தான் மணப்பேன் என்று உறுதியுடன் கடைசி வரை திருமணமே செய்யாமல் காத்திருக்கும் பண்ணையார் மகளின் முடிவு பட்டிக் காட்டு காதலின் உறுதியை காட்டுகிறது.
வளர்ந்த ஜோடிகளாக வரும் சுஜித், சுவாதி, ராஜேஸ்வரியின் நேரடி சந்திப்பு, பழைய காதலியை பார்த்ததும் சுஜித் மனம் உடைவது அவரிடம் மனம் விட்டு பேசுவது என காட்சிகள் வேகம் சேர்க்கிறது. கிளைமாக்சில் சுஜித்தின் மனைவி சுவாதி எடுக்கும் முடிவு ஷாக்.
கிளைமாக்சும் வசனமும் பாக்யரஜின் அந்த 7 நாட்களை ஞாபகப்படுத்துகிறது. ஆனால் அந்த படத்தோடு இப்படத்தை ஒப்பிட முடியாது.
எஸ்.மணிபாரதி எழுதி, தயாரித்து இயக்கியிருக்கிறார் கதையை குழப்பமிலாமல் இயக்கியிருந் தாலும் படத்தில் தெரிந்த முகங்கள் இல்லாதது காட்சியின் கனத்தை குறைத்து விடுகிறது. கிளைமாக் சில் அந்த 7 நாட்கள் பட கிளைமாக் சின் உல்டா என்பது அப்பட்டமாக தெரிகி றது.ஆனால் இது ஏற்புடை யதா என்பது சர்ச்சைக்குரிய விஷயம்தான்.
ரிஷாந்த் அர்வின் இசையில் கிராமத்து மனம்.இன்னும் தூக்கலாக இருந்திருக்கலாம்
கே. கோகுல் ஒளிப்பதிவு தெளிவு.
பரிவர்த்தனை – காதல் கைமாறு.