Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ் (மலையாள பட விமர்சனம்)

படம்: முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்

நடிப்பு: வினித் ஸ்ரீனிவாசன், சூரஜ்ஜ, வெஞ்சாராமூடு, சுதய் கோபா,அர்ஷா பைஜு, தன்விராம், ஜார்ஜ்கோரா

தயாரிப்பு: ஜாய் மூவி புரடக்‌ஷன்ஸ், ஜெயன்ட் மூவிஸ்

இசை: சிபி மேத்யூ அலெக்ஸ்

ஒளிப்பதிவு: விஸ்வஜித் ஒடுக்கதில்

இயக்கம்: அபிநவ் சுந்தர் நாயக்

பி. ஆர். ஓ: பரணி, திரு (தமிழ்)

முகுந்தன் உன்ன(வினித் ஸ்ரீனிவாசன்) வக்கீலுக்கு படித்திருந்தாலும் வழக்கு எதுவும் கிடைக்காமல் கஷ்ட்டப்படுகிறார். எம் எல் ஏ ஒருவரின் வழக்கில் தான் ஆஜராவதாக கூறுகிறார். அந்த விஷயம் சீனியர் வக்கீலுக்கு தெரிந்து அவர் முகுந்தனை வெளியேற்றுகிறார். தன் தாய்க்கு சிகிச்சை அளிக்கக்கூட முடியாமல் கஷ்டத்தில் இருக்கும்போது விபத்து இன்சூரன்ஸ் மோசடியில் பணம் சம்பாதிக்கும் விவரத்தை அறிகிறார். அதில் ஏற்கனவே இருக்கும் போட்டியால் கஷ்டப்படு கிறார். ஒரு கட்டத்தில் எதிர் கூட்டத்தை மீறி முகுந்தன் எப்படி இன்சூரன்ஸ் மோசடிகள் செய்து பணம் சம்பாதிக்கிறார் என்பதே கதை.

மலையாளத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ். இவர்கள் ஆக்‌ஷன் கதைகளை நம்புவதை விட யதார்த்தை நம்பி படம் எடுப்பதில் கைதேர்ந்தவர்கள் என்பதை இப்படம் மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறது.

முகுந்தன் உன்னியாக வரும் வினித் ஸ்ரீனிவாசன் வழக்கு கிடைக்காமல் அல்லாடும் வக்கீலாக நடித்திருக்கிறார். இவர்தான் ஹீரோவா என்றால் நம்ப முடியாதளவுக்கு ஒரு தோற்றம். ஆனால் கதையின் நாயகன் நான்தான் என்பதை சீனுக்கு சீன் நிரூபிக்கிறார்.

அடிபட்டு ஆபரேஷனுக்காக காத்திருக்கும் தன் அம்மாவின் வைத்திய செலவுக்கு பணம் இல்லாமல் திண்டாடும்போது பக்கத்து கவுண்ட்ரில் ஒருவர் கட்டுக்கட்டாக பணம் கட்டுவதை கண்டு ஷாக் ஆவதும் அவருக்கு எப்படி இவ்வளவு பணம் கிடைக் கிறது என்பதை அறிய அவரை பின்தொடர்ந்து சென்று விபத்து இன்சூரன்ஸ் மோசடி பற்றி மோப்பம் பிடிப்பதும் பிறகு தானும் அதுபோல் விபத்து இன்சூரன்ஸ் மோசடியில் ஈடுபட முடிவு செய்து களத்தில் இறங்குவதை இயக்குனர் காமெடியாக நகர்த்தி செல்வது ஆர்வத்தை தூண்டு கிறது.

விபத்தில் சிக்கி சிகிச்சைக்கு வருபவர்களை பின்தொடர்ந்து இன்சூரன்ஸ் கிளைம் செய்து தர வக்காளத்து விண்ணப்பத்தில் கையெழுத்து வாங்க வினித் படும்பாடு தொடர் காமெடிகள்.

போட்டி வக்கீலை தீர்த்துக்கட்ட அவரது காரில் பாம்பு பிடித்துச் சென்று போட்டு அவரை காலி செய்யும் கிரைம் காட்சியில் வில்லனாக மாறிவிடுகிறார் வினித்.

படம் முழுக்க வினித் ஸ்ரீனிவாச னின் ஆக்ரமிப்புத்தான் ஆனாலும் போரடிக்காமல் கடைசி வரை கொண்டு செல்வது இயக்குனரின் கைதேர்ந்த யுக்தி.

படத்தை ஜாய் மூவி புரடக்‌ஷன்ஸ், ஜெயன்ட் மூவிஸ் தயாரித்திருக் கின்றன.

சிபி மேத்யூ அலெக்ஸ் இசை காட்சிகளோடு ஒன்றிப்போகிறது.

விஸ்வஜித் ஒடுக்கதில் ஒளிப்ப திவும் அழகாக ஒர்க்கவுட் ஆகிறது.

கிரைம் கதையை காமெடி சாயம் பூசி கலகலப்பாக இயக்கி யிருக்கிறார் அபிநவ் சுந்தர் நாயக்.

முகுந்தன் உன்னி அசோசியேட்ஸ்- இன்சூரன்ஸ் மோசடி தோலுரிப்பு.

Related posts

ராதே ஷியாம் குழுவினர் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்..

Jai Chandran

ZEE5 தளத்தின் “செருப்புகள் ஜாக்கிரதை” காமெடி சீரிlஸ் எப்படி இருக்கு?

Jai Chandran

RK Suresh’s new film directed by Bharathi Ganesh

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend