Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துல்கர் சல்மான் வெளியிட்ட “வேலன்” பட ஃபர்ஸ்ட்லுக்

ஸ்கை பிலிம் இன்டர்நேஷனல் (SkyMan Films International) சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரிப்பில் முதல் படமாக, பிக்பாஸ் முகேன் மற்றும் மீனாக்‌ஷி நடிக்கும் “வேலன்” படம் துவக்கம் முதலே எதிர்பார்ப்பிற்குரிய படமாக உருவாகி வந்துள்ளது. படபிடிப்பு முடிந்து, படத்தின் போஸ்ட் புரடக்சன் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில், படத் திற்கு கிடைத்த மற்றொரு மகுடமாக, இந்திய அளவில் பிரபலாமான நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் “வேலன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார்.

 

பட தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் கூறியதாவது:

துல்கர் சல்மான் போன்ற ஒரு மிகப்பெரும் நட்சத் திரம் எங்களின் “வேலன்” படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது, எங்களுக்கு கிடைத்த மிகப்பெரும் பெருமை யாகும். இது படத்தின் மீது மிகப்பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற் காக எங்களின் படக்குழு சார்பில் துல்கர் சல்மான அவர்களுக்கு பெரும் நன்றியினை தெரிவித்து கொள்கிறோம். விரைவில் படத்தின் இசை, ட்ரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படும்.

வேலன் படத்தினை SkyMan Films International சார்பில் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் கவின் இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிக்பாஸ் முகேன் நாயகனாகன் மீனாக்‌ஷி நாயகியாக நடிக்கிறார்கள். இவர்க ளுடன் பிரபு, சூரி, மரியா, தம்பி ராமையா, ஹரீஷ் பேரடி, ஶ்ரீரஞ்சனி, சுஜாதா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின் றனர். பிரபல மலையாள மொழி இசையமைப்பாளர் கோபி சுந்தர் இப்படத் திற்கு இசையமைக்கிறார். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, பாலாசுப்பிரமணியன் கலை இயக்கம் செய்கி றார். கே .சரத்குமார் படத்தொகுப்பு செய்ய, சண்டைப்பயிற்சி மகேஷ் மேத்யூ செய்துள்ளார். தினேஷ் நடன அமைப்பு செய்ய, பாடல்களை மதன் கார்கி, ஏகாதசி, வேல்முருகன் எழுதியுள்ளனர். உடை வடிவமைப்பை தத்ஷா ஏ  பிள்ளை மற்றும் .ராஜன் செய்துள்ளனர். எம் .சந்திரன், சவரிமுத்து, கவின் வசனமெழுதி யுள்ளனர். “கலைமாமனி” சிற்றரசு புகைப்பட கலைஞராக பணியாற்றி யுள்ளார்.

Related posts

Action Packed Veerapandiyapuram Trailer –

Jai Chandran

BloomingStar PoojaKumar

Jai Chandran

“காட்டேரி” ஷூட்டிங்கில் நடிகையை கண்டு அலறிய வைபவ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend