Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

கொரோனாவில் இறந்தவர் உடல் புதைக்கலாம்..

கொரோனாவில் இறந்தவர் உடல் புதைக்கலாம்..

விஜயகாந்த் உருக்கமான அறிக்கை..

தே மு தி க தலைவர் விஜயகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள் ளார். அதில் கூறியிருப்பதாவது :

கொரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந் தேன்.
இந்த உலகில் பிறந்தவர்கள் யாராக இருந்தாலும் ஒரு நாள் நிச்சயமாக இறக்கத்தான் போகிறார்கள். இப்படி இருக்கும்போது மருத்துவ துறையை தேர்ந் தெடுத்து மக்களுக்கு சேவை செய்த ஒரு மருத்துவருக்கே இந்த நிலை என்றால் சாதாரண மனிதனின் நிலையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். கால் நடைகள் இறந்தாலே அதை மனிதாபிமானத்தோடு அடக்கம் செய்து உரிய மரியாதை செலுத்தி வரும் தமிழக மக்கள் தற்போது மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவிப்பது மிகவும் வேதனையளிக்கிறது.
உடலை அடக்கம் செய்வதால் எந்த தொற்றும் ஏற்படாது என உலக சுகாதார நிறுவனமும் தமிழக அரசும் அறிவித்துள்ளது. ஆனால் மக்கள் தவறாக புரிந்துகொண்டு ஆம்புலன்ஸ் வாகனத்தை அடிப்பதும் ஓட்டுநர் உள்பட மற்றவர்களை தாக்குவதும் கண்டனத்துக்குரியது. மக்கள் அனைவரும் மனிதாபிமானத்தோடு சிந்தித்து இதுபோன்ற செயலில் இனிமேல் யாரும் ஈடுபட வேண்டாம் என்பதை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும் உடலை அடக்கம் செய்வதால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது என்பதை மக்களுக்கு தமிழக அரசு புரிய வைக்க வேண் டும். கடவுளுக்கு அடுத்தபடியாக நாம் நம்புவது மருத்துவர்களைத்தான். ஆனால் மக்கள் சேவை செய்யும் மருத்துவர் களுக்கே இந்தநிலை என்பது மனதிற்கு மிகுந்த வேதனை அளிக்கிறது.
கொரோனாவில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக் கொள்ளலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு தே மு தி க தலைவர் விஜயகாந்த் தெரிவித்திருக்கிறார்.

#Vijakanth ready to allot partial land to use as burial ground
#dmdk
#விஜயகாந்த் #தேமுதிக

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வைரமுத்து நேரில் அழைப்பு

Jai Chandran

ChiyaanVikram on completing 31 Years in the industry

Jai Chandran

ஆயுத பூஜை, விஜயதசமி திருநாள் நல்வாழ்த்துக்கள் பகிர்ந்த சரத்குமார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend