கடந்த மார்ச் மாதம் கொரோனா லாக்டவுன் அமலானது. இதையடுத்து சினிமா தியேட்டர்கள் 8 மாதமாக மூடியிருந்தது. தியேட்டர்கள் திறக்க கேட்டு தியேட்டர் அதிபர்கள் அரசுக்கு வேண்டுகோள் வைத்தனர் இதையடுத்து கடந்த நவம்பர் மாதம் 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்கள் திறக்க அனுமதிக்கப்பட்டது.
இதனால் பெரிய படங்கள் ரிலீஸ் நிறுத்தி வைக்கப் பட்டது. பிறகு கோரிக்கைக ளை ஏற்று தியேட்டர்களில் 100 சதவிகித இருக்கைக ளையும் பயன்படுத்த அனுமதி வழங்கி தமிழக அரசு கடந்த 4-ம் தேதி உத்தரவிட்டது.
தயாரிப்பாளர்கள், ரசிகர்கள் இதில் மகிழ்ச்சி அடைந்தனர் ஆனால் மத்திய அரசும், மேலும் சிலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஐகோர்ட்டும் 50சதவீதம் இருக்கைக்கு ஆதரவாக உத் திரவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு 100 சதவீதம் அனுமதியை திரும்பப் பெற்றது.
50 சதவிகித இருக்கை களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளபோது, கூடுதல் காட்சிகளை திரையிட திரையரங்குக ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :
தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி
100 சதவீத அனுமதிக்கான உத்தரவு திரும்பப் பெறப்பட்டது
மத்திய அரசின் அறிவுரையை கருத்தில் கொண்டு முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற உத்தரவின் படி கூடுதல் காட்சிகளை திரையிட அனுமதி
முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க அறிவுறுத்தல்
இவ்வாறு முதல்வர் கூறியிருக்கிறார்.