சிம்புபுதிய தோற்றத்தில் நடித்திருக்கும் படம் ஈஸ்வரன். நிதிஅகர்வால் ஹீரோயின். சுசீந்திரன் டைரக்டு செய்திருக்கிறார் எஸ்.தமன் இசை.
இப்படம் பொங்கல் தினத்தில் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வருகிறது.
சமீபத்தில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது. அதில் 3 பாடல்கள் திரையிடப்பட்டன. ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பில் அரங்கம் அதிர்ந்தது.
தற்போது ஈஸ்வரன் படத்தின் செம டிரெய்லர் வெளியாகியிருக்கிறது. ரசிகர்களுக்கு பெண்களுக்கு இளவாடங்களுக்கு என எல்லா தரப்பினருக்கும் ஏற்ற படமாக படம் உருவாகி இருக்கிறது என்பதற்கு ட்ரெய்லரே சாட்சி என்பதுபோல் அருமையான வகையில் பரவசத்தை ஏற்படுத்தி இருக்கிறது ட்ரெய்லர்.
முருகன் கோவிலில் சாமிகும்பிட்டு எல்லோரும் நல்லா இருக்கனும் என்று வேண்டிக்கொள்ளும் சிம்பு,
இந்த குடும்பத்தில் ஒரு உசுரையும் போகவிடமாட்டேன் என எதிரிகளை பந்தாடுவது நிதி அகர்வாலுடன் ரொமான்ஸ் என சிம்பு பரரக்கிறார் அழிக்கறதுக்கு அசுரன் வந்தா காக்கிறதுக்கு இந்த ஈஸ்வரன் வருவேன் என்று ஸ்டைலாக பஞ்ச் வசனம் பேசி தீயாக வெளுத்து வாங்குகிறார்.
பொங்கலுக்கு ரசிகர்களுக்கு சூப்பர் விருந்தாக ஈஸ்வரன் இருக்கும்.
Eeswaran Trailer
#EeswaranPongal
#EeswaranFromJan14th @SilambarasanTR_ #susienthiran