Trending Cinemas Now
விமர்சனம்

கொம்பு (பட விமர்சனம் )

படம் :கொம்பு
நடிப்பு : ஜீவா, திஷா பாண்டே, பாண்டியராஜசீசன் ன், சுவாமிநாதன்
தயாரிப்பு :பன்னீர் செல்வம்
ஒளிப்பதிவு : சுதீப்
இசை :தேவகுரு
இயக்கம் : இ. இப்ராஹிம்

பேய் படங்களுக்கு எப்போதும்மவுசு உண்டு. அதற்கென்று தனி ரசிகர் வட்டமும் இருக்கிறது. நன்றாக திகிலை கிளப்பி விட்டு கதையின் சுவாரஸ் யத்தை அதிகப்படுத்தும் டெக்னிக் தெரிந்தால் இந்த களத்தில் தைரியமாக இறங்கலாம் அந்த தைரியம் இந்த பட இயக்குனர் இப்ராஹிமிற்கு இருந்திருக்கிறது. அதற்கு ஆப்டாக கொம்பு என்ற டைட்டிலும் பிடித்திருக்கிறார்.
தொடக்கத்திலேயே பேய் கதை என்பதை அறிமுகம் செய்துவிடுகிறார்கள்.
பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் திஷா பாண்டே கிராமப் பகுதி ஒன்றில் சில பெண்கள் மின்விசிறியில் ஒரே இடத்தில் தூக்கு போட்டு செத்த தகவலை செய்தி வாயிலாக அறிகிறார் திஷா அந்த வீட்டுக்கு சென்று ஆவி ஆராய்ச்சி செய்ய முடிவு செய்கிறார். தனது நண்பர்கள் ஜீவா பாண்டியராஜன் கோஷ்டியுடன் பேய் வீட்டை தேடி செல்கிறார். ஊர் தலைவரிடம் அந்த வீட்டு சாவியை வாங்கிக்கொண்டு வீட்டை திறக்கச் செல்லும் போது தடங்கல் ஏற்படுகிறது. இதனால் மறுநாள் அங்கு செல்ல முடிவு செய்கின் றனர். மறுநாள் அந்த வீட்டுக்கு சென்று பார்க்கும் போது பாழடைந்து கிடப்ப தை கண்டுஅதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பேயை தேடுகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் மந்திரவாதி வைத்திருந்த கொம்பை தொடுபவர்கள் இறந்து விடுவதாக கூறப்படுகிறது .அவ்வப்போது நடக்கும் திகில் சமாச் சாரங்களையும் மீறி திஷா ஆராய்ச்சியில ஈடுபடுகிறார். ஆனால் பெண்கள் தூக்கு போட்டுக்கொண்டதற்கு காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை. ஹீரோ ஜீவா ரகசியமாக சில விஷயங்க ளை கண்டுபிடிக்கிறார் இருவரில் யார் உண்மையை கண்டுபிடிக்கிறார்கள் என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

ரஜினியை சின்ன வயதில் பார்த்தது போன்ற தோற்றத்தில் வருகிறார் ஜீவா சில இடங்களில் குறிப்பாக பாடல் மற்றும் சண்டை காட்சிகளில் ரஜினியை இமிடேட் செய்கி றார்.
முதல் பாதிவரை திஷாவை வேலை வாங்கி இருக்கி றார்கள். அவரும் பேயை நேரில் பார்த்தால் அதை ஒருவழி செய்துவிடுவது போல் கும் இருட்டு பகுதி யிலும் துணிச்சலாக நடித்தி ருக்கிறார். அவ்வளவு தைரியமானவர் கனவில் தூக்கு போடுவதுபோல காட்சி வந்தவுடன் அலறியடித்து எழுவது கேரக்டரை பின்னுக்கு இழுக்கிறது

பாடல் காட்சி ஒன்றில் ஜீவாவுடன் நெருக்கமாக நடித்து சூடடேற்றுகிறார் திஷா. ஜீவாவின் துப்பறியும் காட்சிகளை இன்னமும் சுவரஸ்யமாக்கி இருந்தால் பிளஸ் ஆக இருந்திருக்கும். பாண்டிய ராஜனை சரியாக பயன் படுத்தவில்லை.
வில்லன் நடிகரை நல்லவ னாக காட்டும்போதே அவர் மீது சந்தேகம் வந்துவிடு கிறது. அந்த ஊர் தலைவர் சைலன்ட் வில்லனாக செயல்பட்டிருக்கிறார் .
படம் முழுவதும் பேய் பற்றி பேசிவிட்டு கிளைமாக்ஸை அவசரமாக.முடித்தது போன்ற உணர்வு ஏற்படுகி றது. கஞ்சா கருப்பு காமெடி துண்டாக நிற்கிறது.

இயக்குனர் இப்ராஹிம் வாய்ப்பை நன்கு பயன் படுத்தி இருக்கிறார். எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுத்த இயக்குனர் தண்ணீரில் வரும் சுழ லுக்கும் விளக்கம் கொடுத்திருக்கலாம்.
ஒளிப்பதிவும்., இசையும் காட்சிகளை ஓவர் பில்டப் செய்யாதது நலம் . ஊர் தலைவரை கொன்றது யார் என்ற சஸ்பென்ஸோடு படம் முடிகிறது.

கொம்பு – திசை திருப்பி.

Related posts

ஆர்யமாலா( பட விமர்சனம்)

Jai Chandran

கடைசி தோட்டா ( பட விமர்சனம்)

Jai Chandran

போத்தனூர் தபால் நிலையம் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend