Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

வல்லமை (படவிமர்சனம்)

படம்: வல்லமை

நடிப்பு: பிரேம்ஜி, திவ்ய தர்ஷினி, தீபா சங்கர், முத்துராமன், சி ஆர் ரஜித், சூப்பர் குட் சுப்பிரமணியன், சுப்பிரமணியன் மாதவன், விது, போராளி திலீபன்

தயாரிப்பு: பேட்டலர்ஸ் சினிமா

இசை: ஜி கே வி

ஒளிப்பதிவு: சூரஜ் நல்லுசாமி

இயக்கம்: கருப்பையா முருகன்

பி ஆர் ஓ: நிகில் முருகன்

மனைவி மற்றும் சொத்துக்களை இழந்து தனது 14 வயது மகளுடன் பிழைப்பு தேடி சென்னை வருகிறார் கிராமத்துவாசி பிரேம்ஜி. வந்த இடத்தில் அவரது மகள் பலாத்காரத்துக்கு ஆளாகிறார். மயக்க நிலையில் தன்னை யாரோ சீரழித்ததை டாக்டர் சொல்வதை மறைந்திருந்து கேட்கிறார் பிரேம்ஜி மகள். பின்னர் தனது தந்தையுடன் சேர்ந்து தன்னை சீரழித்தவனை கொல்ல திட்டமிடுகிறார். அதன் பிறகு நடப்பது என்ன என்பதுதான் கதை.

ரொம்பவே ஒரு மெல்லிய கோடுடன் கூடிய கதை. அதில் நடித்திருக்கும் பிரேம்ஜி உள்ளிட்ட மற்றவர்களும் பெரிய  நட்சத்திரங்கள் கிடையாது

கிராமத்திலிருந்து சென்னைக்கு பிழைக்க வரும் ஒரு அப்பாவி தந்தை தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை எப்படி தட்டி கேட்கிறார் என்ற ஒரு கதாபாத்திரத்திற்கு எதார்த்தமாக நடிக்க பிரேம்ஜியே போதும் என்று இயக்குனர் முடிவு செய்ததும் சரிதான்.

ஒல்லியான தேகம், வறுமைக்கு உரித்தான ஏழ்மை தோற்றம் என பிரேம்ஜி முற்றிலுமாக தனது கதாபாத்திரத்திற்கு பொருந்தி இருக்கிறார்.
தன் மகளுக்கு நேர்ந்த கொடுமையை போலீசில் சொல்ல நினைக்கும் போது யார் பேச்சையோ கேட்டு அந்த எண்ணத்தை கைவிடுவதும், பின்னர் ஒரு கட்டத்தில் தன் மகளை சீரழித்தவனை தானே கொல்வது என்று மகளுடன் சேர்ந்து முடிவெடுக்கும்போது இவர்களால் எப்படி இதுமுடியுமா   என்ற கேள்விக்குறி பெரிதாகவே எழுகிறது.

ஒரு அடி அடித்தால் கீழே விழுந்து விடுவார் என்பது போல் இருக்கும் பிரேம்ஜி சண்டைக் காட்சிகளில் நடித்திருப்பது ஆச்சரியமூட்டுகிறது. நம்பும் படியும், நம்ப முடியாதபடியும் சண்டை போட்டு சமாளித்திருக்கிறார் பிரேம்ஜி.

பிரேம்ஜியின் மகளாக வரும் திவ்யதர்ஷினி கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனால் அவர் எடுக்கும் முடிவுதான் இப்படி கூட ஒரு மைனர் பெண் யோசிக்க முடியுமா என்று எண்ணத்தோன்றுகிறது.

யார் அந்த கருப்பு ஆடு என்று கேட்பதுபோல் சிறுமியை சீரழித்த வில்லன் யார் என்பதை கிளைமாக்ஸ் வரை கண்டுபிடிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கும் இயக்குனர் கருப்பையா முருகன் அந்த திரைக்கதைக்கு ஒரு வேகத்தையும் விறுவிறுப்பையும் கூட்டி இருந்தால் படம் வேகமாக நகர்ந்திருக்கும்.

படத்தை பேட்டலர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஜி கே வி இசை, சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு ஓகே ரகம்.

வல்லமை – நிதானம்.

Two And A Half Star Rating Illustration Vector

 

Related posts

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் “நெஞ்சுக்கு நீதி” டப்பிங் பணிகள் இன்று துவங்கியது

Jai Chandran

யுவன் வெளியிட்ட “அனந்தம்” இணைய தொடரின் டீஸர்

Jai Chandran

ராம் சரண் ‘பெத்தி’ (Peddi) அறிமுக பாடல் 41.6 மில்லியன் பார்வை சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend