Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தெய்வங்களை கொண்டு உருவாகியிருக்கும் கர்ணன் படம்: மாரி செல்வராஜ் விளக்கம்..

தனுஷ் ஹீரோவாக நடிக்கும் படம் கர்ணன். கலைப்புலி எஸ்,தாணு வி கிரியேஷன் சார்பில் தயாரிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.

கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன். தேனி ஈஸ்வர், நடிகர்கள் நட்டி, யோகிபாபு, மதன்குமார், நடிகைகள் ரஜிஷா விஜயன்,  கவுரி, லட்சுமி, ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், கவிஞர் யுகபாரதி, எடிட்டர் செல்வா, நடன இயக்குனர் சாண்டி,  பாடகி தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

 

விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியதாவது:

கர்ணன் எதிர்பார்த்ததுபோல் நடந்தது. இன்றைக்கு எல்லா டைரக்டருக்கும் ஒரு பயம் இருக்கிறது.  நாம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்குமா? வீட்ல பார்ப்பமா, தியேட்டர்ல பார்ப்பமா என்று உலகத்தின் அத்தனை இயக்குனர்களும் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு தவிப்பு எனக்கும் இருந்தது. அதை சரியாக புரிந்துக்கொண்டு எதிர்பார்த்தபடியே படப்பிடிப்புகளை நடத்திய தாணு சாருக்கு நன்றி. கர்ணனை கண்ட நாள் முதல் அதை கேட்ட நாள்முதல் அதை திரையில்தான் காட்டுவேன் என்று தாணு சார் என் கையை பிடித்துக்கொண்டு சொன்னார் அதற்கு நன்றி.

நாம் உருவாக்கும் கதைகள் எனக்கு என்னவிதமான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதை வைத்துத்தான் அதை முன்னிருத்துவேன். இந்த படம் ரிலீஸ் ஆன பிறகு இந்த படத்தின் கதாபாத்திரங்கள் என்ன விளைவுகளை ஏற்படுத்துமோ என்ற பதற்றம்.

கடவுள்களை வைத்து சமூக நீதியை பேச முயன்றிருக்கிறேன் அதான் பதட்டத்துக்கு காரணம்.  இந்த படத்துக்குள்ள கடவுள்கள் முக்கியமாக பங்காற்றியிருக்கிறார்கள்.

தனுஷ் சாரை பற்றி முதலில் சொல்லணும். இந்த தருணத்தை என்னால் நம்பவே முடியவில்லை. ஒருநாள் போன்  வந்தது. எடுத்து ஹலோ என்றேன். மறுமுனையில் தனுஷ் பேசறேன் என்றார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. தனுஷா என்று யோசித்தேன் ..

மீண்டும், மாரி நான் தனுஷ்தான் பேறேன் என்றார்.

எனக்கு பயங்கர சந்தோஷம் இருந்தது. மீட் பண்ணலமா என்றார்.

சார் பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டீர்களா என்றேன்.

படமெல்லாம் பார்க்கவில்லை மீட் செய்யலாமா, உங்க பாட்டு ஒன்ணு சந்தோஷ் சார் ஸ்டிடியொலொவில் கேட்டேன் மீட் பண்ணலாம் என்றார். அவரை நேரில் சென்று சந்தித்தேன்.

சந்தோஷ் சாரும் , மீனுவும் உங்கள பத்தி சொன்னாங்க பத்து நாளா உங்கள பத்து பேசிகிட்டே இருக்காங்க அதான்பாக்கணும் தோணுச்சு.. கதை ஏதாவது இருந்தா சேர்ந்து பண்ணலாம்னு சொன்னார்.

உடனே நான் சொன்னேன், சார் நான் வெச்சிருக்கிற அத்தனை கதையும் நீங்கதான் நடிக்கற மாதிரி இருக்கு  பரியேறும் பெருமாள் உங்கள் நெனச்சிதான் எழுதினேன் என்றேன்

நல்லவேலை நீங்க என்னய பாக்கல் அந்த படம் யார் நடிக்க வேண்டுமோ அவங்க நடித்திருந்தார்கள். அந்த கதைக்கு எது தேவையோ அதை எடுத்துக்கொண்டது. இப்ப எதாவது கதை இருக்கா என்றார்.

இருக்கு அரை மணி நேரம் சொல்கிறேன் என்று கர்ணன் பட கதையை கூறினேன்.  சொல்லி முடித்தவுடன் நல்லா இருக்கு என்று கூறிவிட்டு மூன்று நான்கு தயாரிப்பாளர்கள் பெயர் சொன்னார். அதில் உங்களுக்கு யாரிடன் செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள் என்றார்.

தாணு சார் பெயர் சொன்னார் அப்பவே அவர் தயாரித்தால் நன்றாக இருக்கும் என்று முடிவு செய்துக்கொண்டேன். அவர் பெயரை சொன்னேன். அப்ப தாணுசாரை போய் பாருங்க என்றார்.

ஒ கே பண்ணிவிட்டீர்களா என்றேன்.

ஏன் நம்ப மாட்டீங்களா   என்று என் எதிரிலேயே தாணு சாருக்கு போன் செய்து சார் நான் தனுஷ் பேசறேன். மாரி செல்வராஜிடம் கதை கேட்டேன் பிடித்திருந்தது. நீங்க ஓ கே பண்ணுங்க நாம பண்ணிக்கலாம் என்றார்.

அந்த நிமிடங்களை என்னால் நம்ப முடியவில்லை. ஏன் இன்னும் நர்வஸா இருக்கீங்க என்றார். இல்ல வந்து அரை மணி நேரத்துல கதை ஒகே செஞ்சிட்டீங்களே.. என்றேன் நல்லவிஷயம் அப்படித்தான் உடனே நடக்கும் போய் தாணுசாரை பாருங்கள் என்றார்.

தாணு சாரை பார்க்க வந்தவுடன் செம கதைப்பா என்றார். கதையே உங்களுக்கு சொல்லலையே சார் என்றேன். இல்ல தனுஷ் தம்பி சொல்லிச்சி. அந்த முத காட்சியே அசத்தலா இருக்கு என்றார்.

நீங்களும் ஒருமுறை கேளுங்க என்றேன் வேண்டாம் தனுஷ் தம்பி சொல்லிடுச்சி அதையே செஞ்சிடலாம் என்றார். நீங்களும் கதை கேளுங்கள் என்றேன் சரி என்று கதை கேட்டார்.

நல்லா இருக்கு ஆரம்பிச்சிடலாம் தம்பியும் நீயும் சேர்ந்து என்ன பண்றீங்களோ அதை செய்யுங்க மற்ற எல்லாவற்றையும் நான் பார்த்திருக்கிறேன். என்றார்.

தனுஷ் சார் சொல்லும்போது மாரி செல்வராஜ் என்ற பெயரை கேட்டுத்தான் உங்களை அழைத்திருக்கிறேன். உங்க கதைக்குள்ள என்ன கொண்டு வாங்க எனக்காக கதை பண்ணாதீங்க என்றார். அதையேத்தான் தாணு சாரும் சொன்னார். நீங்க உங்க கதைய எப்படி செய்யணுமோ அப்படி செய்யுங்க உங்க இஷ்டத்துக்கு பண்ணுங்க என்று என்னை கையை பிடித்து அனுப்பி வைத்தார்கள்.

என்னை மாதிரி வளரும் கலைஞருக்கு இப்படி சொல்வது பெரிய விஷயம். பரியேறும் பெருமாள் இண்டிபண்டண்ட்டா பண்ணேன்.அதாவது சுதந்திரமாக செய்வதுதான் இண்டிபண்டண்ட். அப்படி பண்ணதுதான் இந்த கர்ணன்.  ரசித்து ரசித்து பாராட்டுவார்கள்.  நீ எடுத்து முடிச்சிட்டு வா நான் இருக்கேனு தாணு சார் சொன்னார், நீங்க எடுங்க நான் இருக்கேன்னு தனுஷ் சார் சொன்னார்.

திருநெல்வேலியிலே 1997ல் நடக்கும் கதை. 12 வருடம் நான் அசிஸ்டண்ட் டைரக்டரா ஒர்க் பண்ணியிருக்கிறேன். இந்த 12 வருடத்துல ஒரே முறைதான் செட் போட்டு ஒர்க் செய்திருப்பதை பார்த்திருக்கிறேன்.  கர்ணன் படத்துக்கு 100 வீடு செட் போட வேண்டுமென்றேன் தாணு சார் ஓகே சொன்னார். சம்பந்தமில்லாத இடத்துல செட் போடுவதைவிட என் கதையோட வாசனை, நீரோட்டம் எங்கு இருக்கிறதோ அங்கு போய் செட் போடலாம் என்று முடிவு செய்தேன் . அப்படித்தான் அந்த செட் உருவானது. அந்த செட்டை ராமலிங்கம் போட்டு கொடுத்தார். அடுத்து ஒளிப்பதிவாளர்  தேனி ஈஸ்வர் . என்னைவிடவயதில் அதிகமானவர். என்னை புரிந்துக்கொண்டு ஒளிப்பதிவு செய்தார். சினிமாவில் ஈடுபாடு கொண்டவர்களுடன்தான் நான் பணியாற்றி இருக்கிறேன். நான் நினைத்ததுபோலவே இந்த படத்தை எடுத்துக்கொடுத்திருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் என்னை ஈஸியா புரிஞ்சிகிட்டார். பரியேறும் பெருமாள் படத்தின் போதே எனக்காக அவர் பணியாற்ற தொடங்கிவிட்டார். பரியேறும் பெருமாளுக்கு முன்பே நான் கர்ணன் கதையை அவரிடம் சொல்லி இருக்கிறேன்.  இதில் 4 பாடல்கள் இருக்கின்றன. எல்லா பிரச்னைகளுக்கும். எல்லா தேவைகளுக்காகவும் இந்த பாடல்கள் செய்திருக்கிறார். கர்ணன் பாடல்கள் படத்தை தூக்கிகொண்டு போகும் யுகபாரதி பாடல்கள் எழுதி உள்ளார். தமிழ் தெய்வங்களை பற்றி தமிழ் நாட்டுப்புற தெய்வங்களைப்பற்றி, மனிதர்களை பற்றி தெரிந்த ஒருவர் எழுத வேண்டும் என்று முடிவு செய்து அவரிடம் பாடல் எழுத கேட்டேன். திரவுபதையின் முத்தம் உள்ளிட்ட எல்லா பாடல்களும் அப்படித்தான் உருவானது.

நடிகர் நட்டி சார் தேர்வு செய்ததும் பெரிய விஷயம். சதுரங்க வேட்டை படம் பார்த்தபோது அப்போதே அவர் நடிப்பு எனக்கு பிடித்தது. அவரைபற்றி தாணு சாரிடம் சொன்னபோது அவர் நம்ம தம்பிதான் செய் தம்பி என்றார். யோகிபாபு மூலம் சில எமோஷன்கள் சொல்ல வேண்டி இருந்தது.அதற்கு சரியாக செய்துகொடுத்தார். ரஜிஷா, லட்சுமி, கவுரி உள்ளிட்ட எல்லோருமே நன்றாக செய்திருக்கிறார்கள். எனக்கு தெரிந்து சினிமா தெரிந்துவர்கள் 8 பேர்   இருக்கிறார்கள் இதுபோக 492 பேர் ஊர்காரர்கள் நடித்திருக்கிறார்கள். எல்லோரும்  ஒன்றாக கலந்து நடித்திருக்கிறார்கள்.

ஏமராஜா என்ற பாத்திரத்துக்கு லால் சார் நடித்திருக்கிறார். அவ்வளவு பொருத்தமாக அந்த கேரக்டருக்கு பொருந்தி இருக்கிறார். அவரது  உழைப்பு பெரியது. எடிட்டர் செல்வா, சாண்டி மாஸ்டர் என எல்லோருமே வாய்ப்பு கிடைக்கும்போது அதை எளிதாக செய்துவிட்டு  சென்றுவிடுகிறார்கள். அடுத்து எனத் ஊர்மக்கள் இதில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் உழைப்பு பெரியது. தென்பகுதியில் கலையை வளர்க்க விடாமல்  செய்துவைத்திருக் கிறார்கள். அவர்களிடம் மூர்க்கத்தை சொல்லி வளர்த்து வைத்திருக் கிறார்கள் ஆனால் கலை அவர்களிடம்தான் இருக்கிறது. அதைத்தான் நான் இங்கு வந்து பண்ணேன். அதற்குதான் வரவேற்பு, கைதட்டல்கள்.

 

என்னை உருவாக்கி கொள்ள நிறைய கஷ்டமாக இருந்தது. எனக்கு பின்னால் வருபவர்கள் என்னைப்போல் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணுகிறேன்.  இதற்கு பிறகு எனக்கு கிடைக்கும் தயாரிப்பாளர்களும் நடிகர்களும் எனது எண்ணதுக்கு ஏற்ப கிடைக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.

கர்ணன் படத்தை பார்த்தவர்கள் பாராட்டிவிட்டார்கள். தயாரிப்பாளர் தாணு சாருக்கு படத்தை திரையிட்டுவிட்டு பயத்துடன் உடகார்ந்திருந்தேன் கிளைமாக்ஸ் நெருக்கத்தில் அவர் என்ன நினைப்பாரோ என்ற பதற்றமாக இருந்தேன். திட்டுவாரோ என்று எண்ணினேன், அந்த பதட்டத்தை பொறுத்துக்கொள்ள முடியாமல் தியேட்டருக்குள் சென்று அவரது ரியாக்‌ஷன் எப்படி என்பதை பார்த்தேன் அவர் கண்ணாடி கழற்றிவிட்டு அழுதபடி கண்களை துடைத்துக்கொண்டிருந்தார். படம் பார்த்துமுடித்துவிட்டு எனக்கு முத்தம் தந்தார். அப்போதுதான் எனக்கு சந்தோஷம் ஏற்பட்டது.

இவ்வாறு மாரி செல்வராஜ் கூறினார்.

 

Related posts

11:11 Productions ProjectNo 5 Announcement Today

Jai Chandran

VelsSignature’s next short film SOLITUDE released by VijaySethuPathy tomorrow a

Jai Chandran

பிளான் பண்ணி பண்ணனும் (பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend