கலைப்புலி எஸ்.தாணு வி கிரியேஷன் சார்பில் தயாரிக்கும் படம் கர்ணன், தனுஷ் ஹீரோவாக நடிக்கிறார். மாரி செல்வராஜ் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் இன்று சென்னை பிரசாத் லேபில் நடந்தது.
கர்ணன் படம் பற்றி பட தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு கூறியதாவது:
சொல், செயல், சிந்தை அத்தனையும் திக்குமுக்காடுகிறது. படம் பார்த்ததை நான் விவரித்து சொல்லலாம் என்றிருந்தேன் அதை இயக்குனர் மாரி செல்வாரஜே விவரித்துவிட்டார். இதுக்கு மேலா நான் எதுவும் சொல்ல முடியவில்லை. ஏனென்றால் அவர் பேசும்போதே என் கண்கள் கசிந்துக்கொண்டிருந்தது. அந்த அளவுக்கு உள்ளப்பூர்வமான உணர்ச்சி பூர்வமான ஒரு திரைக்காவியத்தை வடித்திருக்கிறார். காலம்காலமாக வாழ்ந்து மறைந்த இயக்குனர் சான்றோர்கள் எல்லாம் அவர் வடிவில் இறங்கி படத்தை செய்திருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்.
நீங்கள் படம் பார்த்து முடிந்தபிறகு இருக்கையைவிட்டு வர முடியுமா என்பதையே சிந்திக்க வேண்டி இருக்கும். ஏனென்றால் அந்த மாதிரி நான் உட்கார்ந்துவிட்டேன். நான் பார்க்கும் நல்லோர்களிடம் எல்லாம் இதுபற்றி சொல்லிக்கொண்டிருக் கிறேன். நான் அந்தளவுக்கு ஷூட்டிங் போவது கிடையாது. ஒருமுறை சென்றேன். ரோடில் கொடும் வெயிலில் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருந் தார். அந்த இடத்தில் அவரை பார்த்துவிட்டு பிறகு ஓட்டலுக்கு சென்று தனுஷை பார்த்துவிட்டு வந்துவிட்டேன் ஆனால் இயக்குனரின் பணிகளை பற்றி பலரும் என்னிடம் சொல்லும்போது அத்தனை வேலையையும் தன் தோள் மீதுபோடுக்கொண்ட ஒரு சுமைதாங்கியாக தெரிகிறார். அவருக்கு என்னுடைய ஆராதனையை, ஆரவாரம் அளப்பறிய மகிழ்ச்சி அத்தனையும் அந்த தம்பிக்கு செலுத்துவேன். அடுத்த சந்தோஷ் நாராயணன் நான்கு பாடல்களை 4 வேதங்களாக தந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வரை சந்திக்கும்போது நீ என்ன வேண்டுமானாலும் எடுத்துச்செய் தலை சிறந்த படமாக வரவேண்டும் என்றேன் அதுபோல் செய்திருக்கிறார். பிகாசோ ஓவியம்போல் காட்சிகள் இருக்கிறது. அதைப்பாராட்ட பாலுமகேந்திரா சார் இல்லையே என்பது போன்ற ஒரு படைப்பு கொடுத்திருக்கிறார். ஆர்ட் டைரக்டர் கதைக்களத்துக்கு ஏற்ப செட் அமைத்தார். எடிட், மிக்கிஸ் செய்தவர்கள் எல்லோரும் அருமையாக செய்திருக்கிறார்கள் தம்பி நட்டி நடிப்பு பிரமாதம்.
இன்னொரு படம் எடுத்திருக்கிறார் என்று மாரி செல்வராஜ் சொன்னார் அல்லவா? அதை ஒரு வியாபாரம் செய்து இந்த கலைஞர்களுக்கு வைப்பு நிதியாக தருவேன். அதோடு மட்டுமல்ல. மாரி செல்வராஜ் வெளியில் போகக்கூடாது, பிடித்து வைக்க வேண்டும் என்று எண்ணினேன் எப்படி வெர்றி மாறனை பிடித்து வைத்திருக்கிறேனோ அப்படி பிடிச்சி வைக்கணும் என்று எண்ணுகிறேமன். ஏனென்றால் இப்படியொரு படைப்பிலக்கணத்தை தருபவர்கள். சினிமா செய்த புண்ணியம் 9ம் தேதிக்கு பிறகு இந்த அழுத்தத்தை உணர்வார்கள். ஆதமார்த்மாக உழைப்பவர்கள் என்றும் விழுந்தது கிடையாது கம்பு ஊன்றிக்கொண்டிருக்கும்போதுகூட நீ படம் செய்வாய் அதை நான் தயாரிப்பேன்.
தனுஷை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. மாரி செல்வராஜை அனுப்பி வைத்தார். அவர் கதையை பவுண்டட் ஸ்கிர்ப்ட் கொடுத்தார் அது தெய்வீகமான ஒரு படைப்பு. அதை பூஜை அறையில் வைத்திருக்கிறேன். கர்ணனை களங்கப்படுத்தவே முடியாது. என்னுடைய இளைய மகன் கலாபிரபு யாரையும் அவ்வளவு சீக்கிரம் மனதில் ஏற்றுக்கொள்ள மாட்டான் அவன் மாரி செல்வராஜிக்கு அடிமையாக இருக்கிறான். படம் பார்த்துவிட்டு நெகிழ்ந்துவிட்டான்.
வெல்லுவான் கர்ணன் புகழ் அள்ளுவான். அச்சம் கொல்லுவான்..
இவ்வாறு தயாரிப்பாளர் எஸ்.தாணு கூறினார்.
இயக்குனர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன். தேனி ஈஸ்வர், நடிகர்கள் நட்டி, யோகிபாபு, மதன்குமார், நடிகைகள் ரஜிஷா விஜயன், கவுரி, லட்சுமி, ஆர்ட் டைரக்டர் ராமலிங்கம், கவிஞர் யுகபாரதி, எடிட்டர் செல்வா, நடன இயக்குனர் சாண்டி, பாடகி தி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டு படம் பற்றிய அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்கள். அனைவரையும் டைமண்ட் பாபு, ரியாஸ் அஹமத் வரவேற்றனர். கவிதா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.