Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

தி கோட் ( பட விமர்சனம்)

படம்: தி கோட்

நடிப்பு: விஜய் (இரட்டை வேடம்), சினேகா,  திரிஷா, மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம்  லைலா, அஜ்மல்  யோகி பாபு, பிரேம்ஜி  மற்றும் பலர்

தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்.

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்:  அர்ச்சனா கல்பாத்தி

இசை: யுவன் சங்கர் ராஜா

ஒளிப்பதிவு: சித்தார்த்தா நுனி

இயக்கம்: வெங்கட் பிரபு

பி ஆர் ஓ: நிகில் முருகன், ரியாஸ் கே அஹமத்

விஜய் தீவிரவாத தடுப்பு அமைப்பில் பணிபுரிகிறார்.  அவருடன் பிரபுதேவா பிரசாந்த் அஜ்மல் இணைந்து பணியாற்று கின்றனர். இவர்களுக்கு மேலதிகாரியாக ஜெயராம்  இருக் கிறார். யுரேனியம் கடத்தும் மோகனின் தீவிரவாத கும்பலை பிடிக்க விஜய் முயலும்போது  ஏற்படும் மோதலில் மோகன் குடும்பம் அழிகிறது. இந்நிலை யில் மற்றொரு அலுவலக வேலையாக தாய்லாந்து செல்லும் விஜய் மனைவி சினேகா மற்றும் மகனை உடன் அழைத்துச் செல்கி றார். அங்கு விஜய்யின் 5 வயது  மகன் கடத்தப்படுகிறான். திடீரென்று விபத்தில் மகன் கருகி இறக்கிறான். இந்த சோகத்தில் நிம்மதி இழந்து தனது மனைவி மற்றும் பிறந்த கைக்குழந்தை உடன் ஊர் திரும்புகிறார் விஜய். தீவிரவாத தடுப்பு பணியை விட்டுவிட்டு அலுவலக பணிக்கு திரும்புகிறார். . அப்போது ரஷ்யாவில் இந்திய தூதரக வாசலில் போராட்டம் நடப்பதை கட்டுப்படுத்த விஜய் அனுப்பப்படு கிறார். அங்கு நடக்கும் மோதலில் தன்னைப்  போலவே இருக்கும் இளைஞனை விஜய் பார்த்து ஆச்சரியப்படுகிறார். அவரிடம் தனிமையில் பேசும்போது சிறுவயதில் இறந்ததாக கருதிய தன் மகன் தான் என்று  தெரிய வருகிறது. தீவிரவாதிகளின் பிடியில் சிக்கி இருக்கும் தன் மகனை அங்கிருந்து காப்பாற்றி ஊருக்கு அழைத்து வந்து விடுகி றார். ஊருக்கு வந்த பிறகு விஜயின் நண்பர்களுக்கும்,  விஜய் குடும்பத்திற்கும் அடுக்கடுக்காக சோதனைகள் வருகிறது. இதையெல்லாம் செய்வது தான் அழைத்து வந்த தன் மகன்தான் என்ற விவரம் தெரிய வருகிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதை பல ட்விஸ்ட்களுடன்   விளக்குகிறது கிளைமாக்ஸ்.

விஜயகாந்த் நடித்த தீவிரவாதிகளை பிடிக்கும்  படங்களின் தொடர்ச்சியாகவே இந்த கதை உருவாக்கப்பட்டிருக் கிறது என்று தோன்றுகிறது. அதற்குக் காரணம் தீவிரவாதி மைக் மோகனை அழிக்க விஜயகாந்த் வேஷத்திலேயே என்டரி தருகிறார் தளபதி விஜய். வாய்ஸில் ஓரளவுக்கு ஒற்றுமை தெரிந்தாலும் பாடிலேங்குவேஜ் காட்டுவதில் சிரமப்பட்டிருக்கிறார் விஜய்.

விஜய்க்கு தோள் கொடுக்கும் விதமாக பிரபுதேவா,  பிரசாந்த் நடித்திருப்பதுடன் கெஸ்ட் ரோலில் சிவகார்த்திகேயன் வருகிறார்.

பிரசாந்த் விஜயின் நண்பராகவே கடைசிவரை இருந்தாலும் ஒரு கட்டத்தில் பிரபுதேவா விஜய்க்கு வில்லனாகி விடுகிறார். அந்த ட்விஸ்ட் எதிர்பாராததாக இருந்தாலும் ஏற்கக் கூடியதாக இல்லை.

ஏற்கனவே ஜெயராம் விஜய் உடன் துப்பாக்கி படத்தில் நடித்திருப்ப தால் அவர்கள் இருவரும் இப்படத்தில் வரும் போதும் அதே காம்பினேஷன் என்று  சொல்லத் தோன்றுகிறதே தவிர. ஸ்பெஷல் ஒன்றுமில்லை.

இளம் வயது விஜய்யாக இன்னொரு கதாபாத்திரத்தை ஏற்றிருக்கும் விஜய் படத்தில் வில்லன் இல்லாத குறையை போக்கிவிட்டார். காரணம் அவரே முழு நேர வில்லனாக நடித்திருக் கிறார். வில்லனாக நடித்தாலும் அதில் ஒரு வரம்பை அவர் கடைபிடித்து இருக்க வேண்டியது மிக அவசியம்.

காதலியை கடத்தி வந்து அவரது கழுத்தை  பாட்டிலால் விஜய் அறுத்து கொல்வது போல் வரும் காட்சி அதிர்ச்சி தருகிறது. இதுவரை விஜய் இப்படி நடித்ததில்லை , அதேபோல் குழந்தைகளுடன் நட்பாக பழகும் குழந்தை சென்டிமென்ட் காட்சியும் எங்கும் இல்லை.

அரசியல் கட்சி ஆரம்பித்து அரசியலில் விஜய் குதித்திருக்கும் இந்த நேரத்தில் பெண் கழுத்தை அறுப்பது போல் விஜய் நடித்திருப்பது அவருக்கு பெண்கள் மத்தியில் இருக்கும் வரவேற்பை பூஜ்ஜியம் ஆகிவிடும் என்ற எச்சரிக்கை இல்லாமல் போனது ஏனோ தெரியவில்லை.

சினேகா நன்றாகத்தான் நடிக்கி றார் ஆனால் பழைய முகம் ஆர்வம் குறைவாகவே காட்சிகள் நகர்ந்து செல்கிறது, திரிஷா ஒரு பாடலில் விஜயுடன் ஜோடி போட்டு ஆடுகிறார்  புதிதாக ஒரு ஆட்டம் போடுவார் என்று பார்த்தால் கில்லி படத்தில் ஆடிய அப்படி போடு பாடல் வரும் அசைவிலேயே ஆடி போர் அடிக்கிறார்.

யோகி பாபு டைமண்ட் பாபு என்ற கதாபாத்திரத்தில் கொஞ்சம் டைம் பாஸ் செய்வதற்கான கலகலப்பை ஏற்படுத்துகிறார்.

தல அஜித் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார் என்ற புரளி படம் வெளியாவதற்கு முன்பு இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருந்தது  அது எல்லாமே டுபாகூர் செய்திதான். இதில் தல என்று வரும் வசனமும் அஜித்துக்கு பொருந்தாது தல தோனிக்கு தான் பொருந்தும். ஏனென்றால் கிளைமாக்ஸ் முழுவதும் ஐபிஎல் கிரவுண்டில் தோனி ஆடும் ஆட்டத்துக்கு நடுவில் நடக்கிறது.

ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்.  தயாரித்திருக்கின் றனர்.

யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார் பாடல்கள் எதுவும் நினைவில் நிற்கவில்லை.

சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவும் ஸ்பெஷல் இல்லை.

கோட் ஒரு வகையில் 1996 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட டோலி என்ற குளோனிங்  ஆட்டுக்குட்டி கருவை மையமாகக் கொண்டது  என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் இதில் மகனாக நடித்திருக்கும் விஜய் குளோனிங் விஜய் என்பது போல் கிளைமாக்ஸில் காட்டி ஒரு புதிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு.

தி கோட் – தளபதிக்காக பலிகடாவாகும் இளைய தளபதி.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

நயன்தாரா நடித்த “O2” டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ரிலீஸ்

Jai Chandran

“பொன்னியின் செல்வன்” கார்த்தி, ஜெயம்ரவி, திரிஷா, ஐஸ்வர்யாராய் பேச்சு

Jai Chandran

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு பிரதமர், முதல்வர் தலைவர்கள் இரங்கல்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend