வைரஸ் கோர தாண்டவம் தொடர்கிறது
ஜப்பான் நாட்டு திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் கென் ஷிமுரா. காமெடி வேடத்தில் நடித்து எல்லோரையும் மகிழ்வித்த இவர் திடீரென்று
கொரோனா தொற்றுக்குள் ளானார். டோக்கியோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நோய் பாதித்து சில தினங்களே ஆனதால் எப்படியும் சிகிச்சைக்கு பின் குணம் அடைந்துவிடுவார் என்று குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருந்தனர். இந்நிலையில் inru அவர் திடீரென்று சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்தார்.
உலக ரசிகர்களையே தங்களிடம் வைத்திருக்கும் ஹாலிவுட் நடிகர்கள் வெளிநாட்டு நடிகர்கள் கொரோனா பாதிப்பு அடைவதும் பலியாவதும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. ஏற்கெனவே .
கொரேனா பாதிப்பில் ஹாலிவுட் நடிகர் டாம் ஹாங்க்ஸ் அவரது மனைவி ரீட்டா வில்சன் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.
ஜேம்ஸ் பாண்ட் பட நடிகை ஓல்கா குரிலென்கோவும் கொரோனா பாதிப்புக்குள் ளானார். சில தினங்களுக்கு முன் ஹாலிவுட் நடிகர் மார்க் ப்ளம் கொரோனா பாதிப் பால் மரணம் அடைந்தார் எனது குறிப்பிடத்தக்கது.
#Japan comedian Ken Shimura dies of coronavirus