Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

உணவு கிடைக்காவிட்டால் மக்கள் வீதிக்கு வருவார்கள்..

தங்கர்பச்சான் எச்சரிக்கை..

பள்ளிக்கூடம் படத்தை இயக்கி நடித்துடன் பல படங்களுக்கு ஒளிப்பதிவாள ராகவும் பணியாற்றியிருப் பவர் தங்கர் பச்சான். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது :
சீனாவிலுள்ள வுஹான் மாகாணத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அறிவித்தது. பிப்ரவரி 24, 25 ஆம் தேதி அமெரிக்க அதிபர் இந்தியா வருகிறார் என்று இந்திய அரசு அறிவித்தது. இதற்கிடையில் கொரோனா வைரஸிலிருந்து தற்காத் துக்கொள்ளச் சொல்லி அமெரிக்க மக்களுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை செய்தார்.

இந்திய ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் நாடாளுமன்றம், சட்டமன்றம் நடத்துவதிலும், அவரவர் களுடைய கட்சியை வளர்ப்ப திலும் முனைப்போடு இருந்துவிட்டு இப்பொழுது வந்து ஆளாளுக்கு மக்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.  உலகம் முழுக்க நிகழ்ந்த கொரோனா பலிச்செய்தி களை வெளியிட்டுக் கொண்டே நேரலையில் அமெரிக்க அதிபரையும், இந்திய பிரதமரையும், ரஜினிகாந்தையும் துரத்திக் கொண்டிருந்தார்கள். அமெரிக்க அதிபரின் வரவால் இந்திய நாடு மாபெரும் வளர்ச்சியை அடையப்போகிறது எனவும் செய்தி வெளியிட்டார்கள். ஆனால், கொரோனாவை அலட்சியப்படுத்தியவர்கள் , ஊடகங்களும்தான் கொரோனாவின் தீவிரத்தை மக்கள்தான் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என இப்பொழுது குறை பட்டுக் கொள்கிறார்கள்.

இருக்கப்பட்டவர்கள் மூன்று வாரம் என்ன, மூன்று ஆண்டுகள் ஆனாலும் வீட்டுக்குள் இருந்தே உயிர் வாழ்ந்து விட முடியும். தினம் வெளியில் ஓடி உழைத்தால் மட்டுமே பிழைக்க முடியும் எனும் நிலையில் வெறும் கை கால்களை நம்பியுள்ள 75 கோடி மக்கள் நம்நாட்டில் இருக்கிறார்கள். இம்மக்க ளுக்கான உயிர் பாதுகாப்பு, மூன்று வேளை உணவு, அடிப்படைத் தேவைகளை எவ்வாறு எங்கிருந்து தரப் போகிறார்கள்? ஏற்கனவே வேலையில்லாத் திண்டாட் டத்தில் அல்லல்பட்டு குடும்பம் நடத்தி வயிற்றைக் கழுவி வந்த மக்கள் இப்போது உயிரை எவ்வாறு காப்பாற்றிக்கொள்வது எனும் கூடுதலான மனச் சுமையால் இடிந்துபோய் கிடக்கிறார்கள். இன்னும் எத்தனை நாட்களுக்கு இம்மக்களால் பிழைப்பின்றி வீட்டுக்குள் முடங்கிக்கிடக்க முடியும் என்பது தெரிய வில்லை. நிலைமை மீறும் பொழுது தன் உயிர் போனாலும் பரவாயில்லை, பிள்ளைகள், மனைவி, தாய் தந்தையரைக் காப்பாற்ற வேறுவழி தெரியாமல் வீதிக்குள் இறங்குவார்கள். அதற்குள்ளாக அவர்களின் தேவைகள் தீர்க்கப்பட வேண்டும்.
நடந்து முடிந்த தவறுகளுக்கு மன்னிப்பு கேட்பதால் ஏழை எளிய மக்களுக்கு எதுவும் கிடைக்கப்போவதில்லை. நீங்கள் கூறுவதையெல் லாம் நாங்கள் கேட்கிறோம்! நாங்கள் எதிர்பார்ப்பதை நீங்கள் ஒரு நொடிகூட தாமதிக்காமல் உடனே மேற் கொள்ளுங்கள். எங்களின் உயிரைக்காப்பாற்றுங்கள்.

இவ்வாறு தங்கர் பச்சான் உருக்கமாகவும், கட்டமாகவும் கூறி உள்ளார்.

#Film Director Thangar Bachan Scolds Government For Corona

Related posts

டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா

Jai Chandran

KannumKannumPesaPesa classical Tune Teaser From Thalaivi Today

Jai Chandran

பிரியா ஆனந்த் திறந்த டெர்மிபியூரில் புதிய தலைமுறை லேசர்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend