கொரோனா 2வது காரணமாக ஊரடன்கு பிறப்பிக்கப்பட்டதால் சினிமா தியேட்டர்கள் கடந்த சில மாதங்களாக திறக்க அனுமதிக்கப்படவில்லை. கொரோனா தொற்று தமிழ்நாடு முழுவதும் குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது. ஆனாலும் சினிமா தியேட்டர்கள் திறக்க அணுமதிக்கப்பட்வில்லை.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் திருப்பூர் சுப்ரமணியம் தலைமையில் நிர்வாகிகள் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தியேட்டர்கள் திறக்க அனுமதி தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.