காவல் துறை மீதான புகார் விசாரணைக்கு புதிய அமைப்பு
கோர்ட்டுக்கு போகிறார் கமல்ஹாசன்..
கொரோனா உஅரடங்கு விதியை மீறியதாக தந்தை, மகனை போலீசார் அடித்து கொன்றனர். சாத்தான்குளத்தில் நடந்த சம்பவத்தையடுத்து அப்பாவி மக்கள் மீது போலீசார் நடத்திய தாக்குதல்கள் சரமாரியாக டிவியில், இணைய தளத்தில் வெளிவரத் தொடங்கி உள்ளது.
இதுபற்றி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் டிவிட்டரில் தெரிவித் திருப்பதாவது:
சாமானியனை மரியாதையின்றி பேசுவது, தாக்குவது, பொய்வழக்கு போடுவது என காவல்துறையின் மீதான மக்களின் புகார்களை யார் விசாரிப்பது?
சட்டரீதியாக இந்தப் போரை மக்கள் நீதி மய்யம் இன்று நீதி மன்றத்தில் தொடங்குகிறது. இத்தனை காலம் இதைச் செய்யாத ஆண்ட, ஆளும் கட்சிகளை மக்கள் அகற்றும் நேரம் இது.
இவ்வாறு கமல்ஹாசன் கூறியிருகிறார்.
previous post