Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

காளிதாஸ் 2 (பட விமர்சனம்)

படம்: காளிதாஸ் 2

நடிப்பு: பரத், அஜய் கார்த்திக், அபர்னிதி, பவானி ஸ்ரீ, சங்கீதா, ஆனந்தநாக், பிரகாஷ் ராஜ், கிஷோர்

தயாரிப்பு: ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன், ஃபைவ் ஸ்டார் செந்தில்

இசை: சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா

இயக்கம்: ஸ்ரீ செந்தில்

பிஆர்ஓ : யுவராஜ்

இளம் போலீஸ் அதிகாரி காளிதாஸ் (பரத்) குற்றங்களை துல்லியமாக கணித்து குற்றவாளிகளை பிடிப்பவர். அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் குழந்தை திடீரென்று குடியிருப்புக்குள்ளேயே காணாமல் போகிறது அந்த குழந்தையை கண்டுபிடிக்கும் பொறுப்பு காளிதாசிடம் வருகிறது. துருவி துருவி சோதனையிட்டும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் அவரது மேலதிகாரி தேடுதல் பணியில் தீவிரம் காட்டுகிறார். ஜூனியர் வக்கீல் (அஜய் கார்த்திக்) மீது போலீசுக்கு சந்தேகம் வருகிறது. அவரை கைது செய்யும் நிலையில் சீனியர் வழக்கறிஞர் (பிரகாஷ்ராஜ்) ஜூனியரை போலீசிடமிருந்து அழைத்து செல்கிறார். காணாமல் போன குழந்தையை கண்டுபிடிக்க முடிந்ததா? குழந்தையை கடத்திய நபர் யார்? என்ற கேள்விகளுக்கு எதிர்பாராத பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

காளிதாஸ் 2 வழக்கமான படமாக இல்லாமல் வித்தியாசமான கிரைம் திரில்லர் பாணியில் திரைக்கதை அமைத்திருப்பது படத்துக்கு புதிய வடிவத்தை தந்திருக்கிறது.

அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் இளம் தம்பதியின் குழந்தை அதே குடியிருப்பில் வசிக்கும் ஜூனியர் வழக்கறிஞர் வளர்க்கும் நாய்க்குட்டி மீது ஆசைப்பட்டு அதன் பின்னாலேயே செல்லும்போது குழந்தைக்கு ஏதோ ஆகப்போகிறது என்ற எண்ணம் ரசிகர்களுக்கு ஏற்படுகிறது, கதையும் அப்படித்தான் செல்கிறது ஆனால் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள், மாறும் காட்சிகள் எல்லாமே பரபரப்பை பற்ற வைக்கிறது.
இவர்தான் வில்லன் என்று கணிக்கும்போது அதை மாற்றி வேறு ஒரு கோணத்திற்கு காட்சிகள் நகர்வது எதிர்பாராத ஷாக்.

போலீஸ் அதிகாரியாக பரத். சினிமா பாணியில் எந்த பநதாவும் செய்யாமல் நிஜ போலீஸ் போல் நிதானத்தை கடைபிடித்து சாட்சிகளை விசாரிப்பதும், அவரது மேலதிகாரியாக வரும் பவானி ஸ்ரீ மரியாதை இல்லாமல் பேசினாலும் அதை பொறுத்துக் கொண்டு பரத் கடமை ஆற்றுவது பாத்திரத்திற்கு கண்ணியம் சேர்க்கிறது.

ஜூனியர் வழக்கறிஞராக நெகட்டிவ் கதாபாத்திரத்தில் புதுமுகம் அஜய் கார்த்திக்
கீ ரோலில் நடித்திருக்கிறார் கதாபாத்திரத்தை உணர்ந்து தன் மீது சந்தேக பார்வை விழும்படியான நடவடிக்கைகளை செய்து எப்போது இவர்
போலீசிடம் வசமாக சிக்கப் போகிறாரோ என்ற ஒரு பரபரப்பை ஏற்படுத்த விடுகிறார் அஜய்.

பவானி ஸ்ரீ
இளம் பெண்ணாக இருந்தாலும் லைட்டான வில்லித்தனத்தை காட்டுவது காரமோ காரம்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு பூவே உனக்காக சங்கீதா இந்த படத்தில் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிரகாஷ்ராஜ், கிஷோர், அனந்தநாக், அபர்னதி ஆகியோரும் தங்களது கதாபாத்திரத்தில் மிளிர்கின்றனர்.

ஸ்கை பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்  டாக்டர் என். யோகேஸ்வரன், ஃபைவ் ஸ்டார் செந்தில் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

சாம் சி.எஸ் பின்னணி  இசை காட்சிகளை வேகப்படுத்துகிறது.
அடுக்குமாடி குடியிருப்புக்குள்ளயே கேமரா சுழன்றாலும் போரடிக்காத வகையில் காட்சிகளை படமாக்கி வித்தியாசப்படுத்தி இருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா.

குழந்தை காணாமல் போகிறது என்ற ஒரு சிறிய கருவை வைத்துக் கொண்டு வித்தியாசமான சம்பவங்களை கோர்த்து மலையாள திரில்லர் கதைபோல் காளிதாஸ் 2 படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஸ்ரீ செந்தில்.

குழந்தைகள் மீது கவனத்தை வைக்காமல் கொண்டாட்டத்தில் கவனம் வைக்கும் தம்பதிகளுக்கு இது ஒரு முன்னெச்சரிக்கை படமாக மட்டுமல்லாமல் விழிப்புணர்ச்சி படம்.

காளிதாஸ் 2 – குழந்தைகளும், தம்பதிகளும் பார்க்கவேண்டிய படம்.

 

Review by
K Jayachandhiran
trending cinemas now. com

 

Related posts

பேட் கேர்ள் (BadGirl) பட விமர்சனம்

Jai Chandran

பாராசூட் (வெப் சீரிஸ் விமர்சனம்)

Jai Chandran

Reason behind my decision to make ‘Rocketry’- MADHAVAN

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend