அமேசானில் அமிதாப், ஜோ, கீர்த்தி படம் உள்ளிட்ட 7 படங்கள் ரிலீஸ்
முழுவிவரம் அறிவிப்பு..
அமிதாப், ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் நடித்த படங்கள் உள்ளிட்ட 7 படங்கள் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெவ்வேறு மொழிகளில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. மக்களிடம் பெரும் எதிர்பார்ப்புள்ள ஏழு இந்தியத் திரைப்படங்களை அமேசான் ப்ரைம் வீடியோ நேரடியாக உலகளாவிய அளவில் ப்ரீமியர் செய்யவுள்ளது. அதன் விவரம் வருமாறு :
” அமிதாப் பச்சன் ( Black, Piku ) மற்றும் ஆயுஷ்மான் குரானா ( Shubh Mangal Zyaada Saavdhan, Andhadhun ) நடித்துள்ள ஷுஜித் சிர்காரின் (Shoojit Sircar ) “குலாபோ சிதாபோ” (Gulabo Sitabo ) வித்யாபாலன் ( Dirty Picture, Kahaani ) நடித்துள்ள “சகுந்தலா தேவி” (Shakuntala Devi), ரா.மாதவன் ,அனுஷ்கா ஷெட்டி நடித்துள்ள நிசப்தம், ஜோதிகா நடித்துள்ள “பொன்மகள் வந்தாள்” மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள “பென்குயின்” ( தமிழ் மற்றும் தெலுங்கு ) உட்பட ஏழு இந்திய மொழித்திரைப்படங்கள் மே மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதத்திற்குள் வரிசையாக அமேசான் பிரைமில் வெளியிடப்பட இருக்கிறது.
சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட் அப் காமெடி, ப்ரைம் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேசான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரமற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகளின் இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களை முன்கூட்டியே அணுகும் வசதி, ப்ரைம் ரீடிங் வழியாக கட்டுப்பாடில்லாத, அளவில்லாத வாசிப்பு என அற்புதமான மதிப்புமிக்க வசதிகளை மாதம் வெறும் ரூ. 129 கட்டணத்தில் ப்ரைம் வழங்குகிறது.
“அமேசானில் நாங்கள் எங்கள் வாடிக்கையாளர்களின் குரலுக்கு செவிமெடுக்கிறோம். அதன் அடிப்படையில் எங்களது பணிகளை மேற்கொள்கிறோம்” என்று அமேசான் ப்ரைம் வீடியோ இந்தியாவின் கண்டன்ட் பிரிவின் இயக்குநரும் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் “கடந்த இரண்டு ஆண்டுகளாக, பல்வேறு மொழிகளில் திரையரங்கில் வெளியாகும் புதிய திரைப்படங்களை, வெளி யான ஒரு சில வாரங்களி லேயே பார்க்க, வாடிக்கையா ளர்களுக்குப் பிடித்த, அவர்கள் விரும்பும் தளமாக ப்ரைம் இந்தியா மாறி யுள்ளது. இப்போது நாங்கள் இதை ஒருபடி மேலே கொண்டு செல்கிறோம். இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஏழு திரைப்படங்கள் பிரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. சினிமா அனுபவத்தை வாடிக்கையா ளர்களின் வீட்டு வாயிலுக்கே கொண்டு சேர்க்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.
“மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த 7 படங்களின் வெளி யீட்டை இந்தியப் பார்வையா ளர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். மற்றும் வாடிக்கையாளர் களுக்காக இந்தத் திரைப் படங்களை முதன்மையாக அமேசான் ப்ரைம் வீடியோ வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகி றோம்.
இதனால் வாடிக்கையா ளர்கள் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தபடி வசதியாகவும், மற்றும் தங்களுக்கு விருப்பமான திரையிலும் இவற்றைப் பார்த்து ரசிக்க முடியும். ப்ரைம் வீடியோ இந்தி யாவில் அதன் ஆழமான ஊடுருவலுடன் 4000-க்கும் மேற்பட்ட டவுன் மற்றும் நகரங்களில் பார்வையா ளர்களைக் கொண்டுள்ளது.
மற்றும் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தி யங்களில் உலகளாவிய ரீதியில் சென்றடைவதன் வழியாக இந்தப்படங் களுக்கு ஒரு பெரிய உலக ளாவிய வெளியீட்டுத் தளத்தை அளிக்கிறது. இந்த முன் முயற்சியைப் பற்றி நாங்கள் உண்மையிலேயே உற்சாகமாக உணர்கிறோம். மற்றும் இந்த வெளியீடு களால்எங்கள் பிரைம் உறுப் பினர்களை மகிழ்விப்போம் என்று நாங்கள் நம்புகி றோம்” என்று கூறியுள்ளார் அமேசான் பிரைம் வீடியோ இந்தியாவின் இயக்குநரும் மற்றும் தேசிய பொது மேலாளருமான கெளரவ் காந்தி.
அமேசான் பிரைம் வீடியோவின் டைரக்ட்-டு-சர்வீஸ் தொகுப்பு:
Ponmagal Vandhal( தமிழ்) மே 29 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்:
ஜோதிகா, பார்த்திபன், பாக்கியராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ள Ponmagal Vandhal சட்டம் சார்ந்த திரைப்படமாகும். ஜே ஜே ஃபிரெட்ரிக் அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ள இப்படத்தை ஜோதிகா மற்றும் சூர்யா இனணந்து தயாரித்துள்ளனர்.
Gulabo Sitabo (இந்தி) ஜுன் 12 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்:
அமிதாப் பச்சன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோர் நடித்துள்ள Gulabo Sitabo சாதாரண மக்களின் அன்றாடப் போராட்டங்களை சித்தரிக்கும் ஒரு குடும்ப நகைச்சுவை திரைப்படமாகும். இந்தப்படத்தை ஜுஹி சதுர்வேதி ( Juhi Chaturvedi ) எழுதியுள்ளார். ஷுஜித் சிர்கார் ( Shoojit Sircar ) இயக்கியுள்ளார். ரோனி லாஹரி ( Ronnie Lahiri ) மற்றும் ஷீல்குமார் ( Sheel Kumar ) ஆகியோர் இதைத் தயாரித்துள்ளனர்
Penguin (தமிழ் மற்றும் தெலுங்கு) ஜுன் 19 முதல் அமேசான் பிரைம் வீடியோவில்:
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘பென்குயின்’ ஈஷ்வர் கார்த்திக் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ஆகும். இப்படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் கார்த்திக் சுப்புராஜ் தயாரித்துள்ளார்.
Law (கன்னடம்) அமேசான் பிரைம் வீடியோவில் ஜுன் 26 முதல்:
ராகினி சந்திரன் (Ragini Chandran) சிரி பிரஹ்லாத் (Siri Prahlad) மற்றும் மூத்த நடிகர் முகமந்திரி சந்திரு (Mukhyamantri Chandru) ஆகியோர் நடித்துள்ள இந்த Law படத்தை ரகு சமர்த் (Raghu Samarth) எழுதி இயக்கியுள்ளார். அஸ்வினி மற்றும் புனித் ராஜ்குமார் மற்றும் குருதுத் தல்வார் ஆகியோர் தயாரித்துள்ளனர்.
Shakuntala Devi( இந்தி) வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது:
வித்யாபாலன் கதாநாயகியாக நடித்துள்ள “சகுந்தலா தேவி”(Shakuntala Devi) என்பது எழுத்தாளரும், கணிதவியலாளருமான சகுந்தலா தேவியின் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வாழ்க்கை வரலாற்றுப்படமாகும். இப்படத்தை நயனிகா மஹ்தானி (Nayanika Mahtani) மற்றும் அனுமேனன் ஆகியோர் எழுதியுள்ளனர். இதை அபுண்டண்டியா எண்டெர்டெயின்மெண்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா தயாரித்துள்ளன.
Sufiyum Sujathayum( மலையாளம்) வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட உள்ளது:
அதிதி ராவ் ஹைதரி மற்றும் ஜெயசூர்யா ஆகியோர் நடித்துள்ள “Sufiyum Sujathayum” நாரனிபுழா ஷானவாஸ் (Naranipuzha Shanavas) அவர்களால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. மற்றும் இது விஜய்பாபுவின் ஃபிரைடே ஃபிலிம் ஹவுஸால் தயாரிக்கப்பட்டுள்ளது.
The Family Man, Mirzapur, Inside Edge, மற்றும் Made In Heaven போன்ற இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்கள் மற்றும் விருதுகள் வென்ற மற்றும் பரவலான பாராட்டுதல்களைப் பெற்ற உலகளாவிய அமேசான் பிரைம் வீடியோவில் ஒரிஜினல் தொடர்களான Tom Clancy’s Jack Ryan, The Boys, Hunters, Fleabag மற்றும் The Marvelous Mrs.Maisel உட்பட ஆயிரக்கணக்கான சமீபத்திய மற்றும் பிரத்யேக திரைப்படங்கள் மற்றும் தொலைகாட்சி நிகழ்ச்சி களுடன் இணைந்துள்ள இப்புதிய வெளியீடுகள் அமேசான் ப்ரைம் வீடியோவில் அமேசான் ப்ரைம் உறுப்பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி கிடைக்கப்பெறும்.
இச்சேவையில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி மற்றும் பெங்காலி ஆகிய மொழிகளில் கிடைக்கப் பெறும் படைப்புகளும் அடங்கும்.
ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள் ஃபயர் டிவி, ஃபயர் டிவி ஸ்டிக் ஃபயர் டேப்ளெட்கள், ஆப்பிள் டிவி, ஏர்டெல், வோடோஃபோன், BSNL, போன்றவற்றின் ப்ரைம் வீடியோ ஆப்-ல் பிரைம் உறுப்பினர்களால் இந்த வெளியீடுகளை எந்த நேரத்திலும் மற்றும் எந்த இடத்திலும் பார்வையிட முடியும்.
மேலும் ப்ரைம் வீடியோ ஆப்பில் பிரைம் உறுப்பினர் களால் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் அனைத்து அத்தியாயங் களையும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். மற்றும் எந்தவொரு இடத்
திலும் ஆஃப்லைனில், எந்த வொரு கூடுதல் கட்டணமும் இன்றி பார்வையிட முடியும்.
ப்ரைம் வீடியோ தற்போது இந்தியாவில் ப்ரைம் உறுப் பினர்களுக்கு எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது பிரதிமாதம் ரூ.129 என்னும் கட்டணத்தில் கிடைக்கப் பெறும். புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிந்துகொள்ள வருகை தரவும். www.amazon.in/prime மற்றும் 30-நாட்கள் டிரையலுக்கு சப்ஸ்கிரப் செய்யவும்
அமேசான் பிரைம் வீடியோ குறித்து:
பல்வேறு விருதுகளை வென்ற, அமேசான் ஒரிஜினல் தொடர்களின் தொகுப்புகள் ஆயிரக்கணக்கான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஆகிய அனைத்து விரும்பத்தக்க விஷயங்களையும் ஒரே இடத்தில் சுலபமாகக் கண்டறியத்தக்க வகையில் வழங்கும் ப்ரைம் உறுப்பினர்களுக்கான ஒரு ப்ரீமியம் ஸ்ட்ரீமிங் சேவை ப்ரைம் வீடியோ ஆகும். மேலும் அறிய பார்க்கவும் PrimeVideo.com
ப்ரைம் வீடியோவில் உட்பட்டுள்ளவை: இந்த புதிய வெளியீடுகள் ஆயிரக் கணக்கான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப் படங்களுடன் இணைந் துள்ளது. இதில் இந்தியாவில் தயாரிக்கப் பட்ட அமேசான் ஒரிஜினல் தொடர்களான The Family Man, Mirzapur, Inside Edge மற்றும் Made In Heaven உலகளாவிய அளவிலான பாராட்டுதல்களைப் பெற்றுள்ள உலகளாவிய அமேசான் ஒரிஜினல் தொடர்களான Tam Clancy’s Jack Ryan, The Boys, Hunters Fleabag, மற்றும் The Marvelous Mrs.Maisel உள்பட பல்வேறு மிகச்சிறந்த உள்ளடக்கங்கள் பிரைம் உறுப்பினர் தன்மையின் ஒரு பகுதியாக கிடைக்கப் பெறுகிறது. ப்ரைம் வீடியோவில் ஹிந்தி, மராத்தி, குஜராத்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பஞ்சாபி, மற்றும் பெங்காலி ஆகியவைகள் உள்பட பல்வேறு உள்ளடக்கங்கள் கிடைக்கப் பெறுகின்றன.
உடனடி அணுகுவசதி: ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்களில் கிடைக்கப் பெறும் ப்ரைம் வீடியோ ஆப், ஃபயர் டிவி ஸ்டிக், ஃபயர் டேப்ளட்கள், ஆப்பிள் டிவி மற்றும் பல்வேறு கேமிங் சாதனங்களில் உறுப்பினர் கள் ப்ரைம் வீடியோ உள்ளடக்கங்களை எங்கு வேண்டுமானாலும், எந்த நேரத்திலும் பார்க்கலாம். ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் ப்ரீ-பெய்டு மற்றும் போஸ்ட்-பெய்டு சந்தாதாரர் திட்டங்களின் கீழும், பிரைம் வீடியோ நுகர்வோர்களுக்குக் கிடைக்கப்பெறுகிறது. ப்ரைம் உறுப்பினர்கள் அவர்களது மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்ளெட்களில் உள்ள ப்ரைம் வீடியோ ஆப்பில், ப்ரைம் உறுப்பினர்கள் அத்தியாயங்களைப் பதிவிறக்கம் செய்து, எப்போது வேண்டுமா னாலும் ஆஃப்லைனில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றிப் பார்த்து மகிழலாம்.
மேம்படுத்தப்பட்ட அனுபவங்கள்: 4K Ultra HD – மற்றும் High Dynamic Range (HDR) இணக்கத்தன்மை கொண்ட உள்ளடக்கங்கள் வழியாக ஒவ்வொரு பார்வையிடல்களையும் சிறப்பாக்கலாம். உங்களுக்குப் பிடித்தமான திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின், பின்னணித் தகவல்களை IMDB-இன் ஆற்றலுடன், பிரத்தியேக X-Ray ஆக்சஸ் வழியாகப் பார்த்து மகிழலாம். தேர்ந் தெடுக்கப்பட்ட மொபைல் பதிவிறக்கங்கள் வழியாக, சேவ் இட் ஃபார் லெட்டர் செய்து, ஆஃப்லைன் பார்வையிடல்களையும் மேற்கொள்ளலாம்.
ப்ரைம் உடன் உட்பட்டுள்ளது: ப்ரைம் வீடியோ, தற்போது இந்தியாவில், எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி, பிரைம் உறுப்பினர்களுக்கு ஆண்டிற்கு வெறும் ரூ.999 அல்லது மாதம் ரூ.129 கட்டணத்தில் கிடைக்கப் பெறுகிறது. புதிய வாடிக்கையாளர்கள் மேலும் அறிய www.amazon.in/prime பார்க்கலாம் மற்றும் ஒரு இலவச 30 நாட்கள் சோதனை முன்னோட்டத் தைப் பெறலாம்.
அமேசான் பிரைம் நிறுவனம் அறிவித்துள்ள 7 படங்களின் விவரங்கள் கோலிவுட் முதல் பாலிவுட் வரை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#7 big movies releasing in amesan prime video update
#jothika #keerthi suresh #amitabbachan