Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

புதிய ஜானரில் உருவாகும் விதார்த்தின் கார்பன் – இயக்குனர் சீனுவாசன்

விதார்த் நடிப்பில் வரவிருக்கும் 25-ஆவது படம் ‘கார்பன்’.விஜய் ஆண்டனியை வைத்து ‘அண்ணாதுரை’ படத்தை இயக்கிய சீனிவாசன்தான் இந்தப்படத்தை இயக்கியிருக்கிறார்.

விதார்த்துக்கு போலீஸ் ஆக வேண்டும் என்பதுதான் லட்சியம்.அதற்கான தீவிர முயற்சியில் இருப்பவரின் வாழ்வில் ஒரு சம்பவம் நடக்கிறது அதிலிருந்து மீண்டாரா இலட்சியத்தை அடைந்தாரா என்பதுதான் கதை.

ஒரு இரவு விதார்த்துக்கு கனவு வருகிறது.அந்தக் கனவில் விதார்த்தின் அப்பாவுக்கு கார் ஆக்சிடென்ட் நடக்கிறது.இது வெறும் கனவுதானே என்று நினைக்கும் விதார்த் வாழ்வில் அடுத்தநாளே அப்படியொரு சம்பவம் நடக்கிறது. கனவில் பார்த்தமாதிரியே ஆக்சிடெண்ட் நடக்கும் இடம்,கார் எல்லாமே ஒரே மாதிரி இருக்கிறது.
அப்பாவின் உயிரைக் காப்பாற்ற தேவையான பணமும் இல்லாமல்,விபத்து ஏற்படுத்திய நபரின் முகம் தெரியாமல் அவர் படும் பாடுதான் ‘கார்பன்’

பெரும்பாலும் இரவில் நடக்கிற கதை.ஐம்பதுக்கும் மேற்பட்ட லொகேஷன்களில் படமாக்கப்பட்டிருக்கும்.
இந்தப்படத்தில் தான்யா பாலகிருஷ்ணன் ஹீரோயினாக நடித்திருக்கிறார்.
தவிர,இயக்குனர் மாரிமுத்து, மூணாறு ரமேஷ், பிச்சைக்காரன் மூர்த்தி, ராம்சன் வினோத் சாகர், டவுட் செந்தில், பேபி ஜானு பிரகாஷ் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – விவேக் ஆனந்தம் சந்தோஷ், இசை – சாம் சி எஸ்,எடிட்டர் பிரவின் கே.எல்.

“முதல் படத்துக்கும் இந்தப் படத்துக்கும் ஏன் இவ்வளவு இடைவெளி.!? ” என்று இயக்குனரிடம் கேட்டபோது ” இப்போல்லாம் இயக்குனர் , நடிகர் ,தயாரிப்பாளர் எல்லோருமே காம்பினேஷன் இருந்தால்தான் படம் பண்ணவே வர்றாங்க. கதையை மட்டும் நம்பி வர்றது சிலபேர்தான்! அப்படி எனக்கு கிடைத்தவர்தான் ‘பெஞ்ச்மார்க் பிலிம்ஸ் ‘ ஜோதி முருகன் – பாக்கியலட்சுமி இரண்டு பேரும். ரெண்டு பேருமே நண்பர்கள்தான். வெளிநாட்டில் வேலை பார்க்கிறார்.லாக்டவுனுக்கு ஊருக்கு வந்திருந்த போது, இந்தக் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று ஆரம்பிச்சு இதோ ரிலீஸ்க்கு ரெடி படம் பார்த்த விநியோகஸ்தர்கள் மற்றும் திரை அரங்கு உரிமையாளர்கள் கொடுத்த ஊக்கமும் ஆதரவும் என் படத்துக்கு கிடைத்த வெற்றி”.என்கிறார்.

Related posts

Yuvan-25 in Malaysia: Tickets Soldout within 45 Minutes

Jai Chandran

ஓடிடியில் ரூ 100 கோடி கடந்து ’ப்ரி ப்ஸினஸ்’ சாதனையில் சூர்யா படம்.. ரசிகர்கள் டிரெண்டிங் அசத்தல்..

Jai Chandran

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவி: அமைச்சரிடம் பூச்சி எஸ். முருகன் கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend