2021ம் ஆண்டில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான களம் சூடுபிடிக் கத் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்டது. பொதுக்கூட்டம், தெருமுனை பிரசாரம் என அனல் பறந்துக்கொண்டிருக்கிறது. இதற்கிடையில் பிரதான கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, மற்றும் அசாம் ஆகிய 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரேதேசத் திற்கு சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது.
தமிழ்நாட்டில் 234 இடங் களுக்கும், கேரளாவில் 140 இடங்களுக்கும், அசாமில் 126 இடங்களுக்கும், புதுச்சேரி யில் 30 இடங்களுக்கும், மேற்கு வங்கத்தில் 294 இடங்க ளுக்கும் தேர்தல் நடக்க உள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடக் கிறது.
வேட்புமனு தாக்கல் மார்ச் 12ம் முதல் மார்ச் 19 வரை நடக்கிறது. மார்ச் 20ம்தேதி வேட்பு மனு பரிசீலனை நடக்கிறது. மார்ச் 22 வேட்பு மனு திரும்ப பெறலாம்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்க உள்ளது.
கேரளவில் 140 தொகுதிக ளுக்கு ஏப்.6ல் ஒரே கட்டமாக தேர்தல் நடக்கிறது.
அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கு 3 கட்டங் களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு வேட்புமனு தாக்கல் மார்ச் 2 தேதி முதல் ஆரம்பமாகும். மார்ச் 27ம் தேதி முதல் 3 கட்டங்களாக தேர்தல் நடக்கும்.
மேற்வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது.
மே 2 ம் தேதி 5 மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களின் முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை பல கட்டங்களாக நடந்து வந்தன. அதில் பெரும் பாலான கட்சிகளுக் குள் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் இன்று காலை கையெழுத் தானது. காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட் டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப் பட்டுள்ளது.
சென்னை அண்ணா அறிவால யத்தில் மு.க ஸ்டாலின்-கே எஸ்.அழகிரி முன்னிலையில் இந்த தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
மேலும் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள், மனித ய மக்கள் கட்சிக்கு 2 இடங்கள், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு தலா 6 இடங்கள் ஒதுக்கப் ட்டு உடன்பாடு ஏற்பாடுள்ளது. முன்னதாக நேற்று மாலை வைகோ தலைமையிலான ம.தி.மு.க.வுடன் தி.மு.க. தொகுதி பங்கீடு உடன் பாட்டை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து முடித் ர். ம.தி.மு.க. வுக்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அக்கட்சி 6 இடங்களிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.