Trending Cinemas Now
அரசியல் செய்திகள் தமிழ் செய்திகள்

அமெரிக்க கலவரம் டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முற்றுகை..

அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப்.  அவரது பதவிக்காலம் முடிந்ததை யடுத்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது.  ட்ரம்பை எதிர்த்து ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்.  இதில் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.

வரும்  20ந்தேதி புதிய அதிபராக ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.
பைடன் வெற்றிக்கு ஏற்க  மறுத்து  டிரம்ப் கருத்து தெரிவித்து வருகிறார். தேர்தலில் எனது வெற்றி யை திருடிவிட்டார்கள் என்று கூறி வருகிறார்

ஜோ பைடன் வரும் 20ந்தேதி பதவியேற்க உள்ளதால் அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்ததற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை அமெரிக்க காங் கிரஸ் சபை மேற்கொண் டது. இந்நிலையில் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் இன்று  அமெரிக்க நாடாளுமன்றத் திற்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிக அளவில் ஆர்ப்பாட்டக் காரர்கள் கூடி நாடாளு மன்றத்துக்குள் புகுந்து கலவரத்தில் ஈடுபட முயன்றனர் அவர்களை போலீசாரும் பாதுகாப்பு படையினரும் தடுத்ததுடன் துப்பாக்கி சூடும் நடத்தினார்கள். இதில் ஒரு பெண் உள்ளிட்ட 4பேர்கள் இறந்தனர்.

இதற்கிடையில் தேர்தல் குழு வாக்கு எண்ணிக்கையில் 306 வாக்குகளை பெற்று ஜோ பைடன் புதிய ஜனாதி பதியாக  அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான சான்றிதழை துணை ஜனாதிபதி  மைக் பென்ஸ் வழங்கினார். இதன் மூலம் வரும் 20 ஆம் தேதி ஜோ பைடன் புதிய ஜனாதி பதியாக பதவியேற்க வுள்ளார்.

இதற்கிடையில்  ஆர்ப்பாட்டகாரர்களை தூண்டிவிடும் விதமாக டிரம்ப்  டுவிட்டரில் மெசேஜ்,  வீடியோ பகிர்ந்தார்.  இதையடுத்து டிவிட்டர் நிறுவனம் டிரம்புடைய  கணக்கை தற்காலிகமாக 12 மணி நேரங்களுக்கு முடக்கியது.
பேஸ்புக் நிறுவனமும் டிரம்பின் தகவல்களை நீக்கியது, அவருடைய கணக்கை 24 மணி நேரம் முடக்கியது. இன்ஸ்டாகிராம் நிறுவனமும் அவருடைய கணக்கை முடக்கியது.

டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய கலவரத்துக்கு  உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்  இந்திய பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், முறையாகவும், அமைதியாகவும் அதிகாரப் பரிமாற்றம் தொடர வேண்டும். சட்ட விரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை  தகர்த்தெறிய அனுமதிக்க கூடாது’ என தெரிவித்துள் ளார். டிரம்பின் செயலை கடுமையாக விமர்சித்த  ஜோ பைடன், அரசியலமைப்பை டிரம்ப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

முன்னாள் ஜனாதிபதி  பில் கிளிண்டன் டுவிட்டரில்
“டொனால்டு டிரம்பின் விஷமத்தனமான அரசியலால் அமெரிக்க நாடாளுமன்றம், அரசியலமைப்பு மற்றும் தேசம் முன்னெப்போதும் இல்லாத தாக்குதலை எதிர்க்கொண்டு உள்ளது” என  கண்டனம் தெரிவித்து உள்ளார்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், வாஷிங்டனில் நடைபெற்றுவரும் இழிவான நிகழ்வுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும், அதிகார மாற்றம் அமைதியாக நடைபெற வேண்டும் என்றார்.

America Capitol Riots

Related posts

நடிகர் லால் பற்றி கார்த்தி பாராட்டு

Jai Chandran

விஜய் கல்வி விருது வழங்கும் விழா!

Jai Chandran

மாறா படத்தில் இடம் பெறும் ’ஒரு அறை உனது..’ மெலடி பாடல் ரிலீஸ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend