Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஹாலிவுட் பாணியில் ‘சக்ரா’ டெஸ்ட் ப்ரிவியூ.. விஷால் ஏற்பாடு

திரைப்படம் வெளிவருவதற்கு முன்பாக ஹாலிவுட் திரை யுலகில் பல தரப்பட்ட பார்வையாளர்களுக்கு படத்தைத் திரையிட்டுக் காட்டி அவர்களின் கருத்தைக் கேட்டு விளம்பரப்படுத்தும் வழக்கம் உள்ளது.

இதே பாணியில் தமிழ்த் திரையுலகில் முதன் முதலாக ‘இரும்புத்திரை’ திரைப்படத்திற்கு விஷால் செய்திருந்தார். அடுத்ததாக தனது நடிப்பில் எம்.எஸ். ஆனந்தன் இயக்கி விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்துள்ள ‘சக்ரா’ படத் திற்கும் இதே உத்தியைக் கையாள் கிறார் .சமூகத்தில் பலதரப்பட்ட பார்வையாளர் களுக்கு படத்தைப் போட்டுக் காட்டி கருத்துகள் பெறப் பட்டு விளம்பரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படிப் படம் பார்ப்பவர்களில் ஆட்டோக்காரர்கள் முதல் ஐடி வேலைப் பார்ப்பவர்கள் வரை பலரும் கலந்து இருப்பார்கள். இப் போது ‘சக்ரா’ பட டெஸ்ட் ப்ரிவியூ ஓடிக்கொண்டிருக்கிறது. “இந்தப் புதிய முறை ஹாலிவுட்டில் பல்வேறுபட்ட மக்களின் உணர்வுகளை அறியும் வெற்றிகரமான விளம்பர உத்தியாக நிரூபிக்கப்பட்டுள்ளது .படம் பார்த்தவர்கள் ‘இரும்புத் திரை’யை விட ‘சக்ரா’ நன்றாக இருப்பதாகப் பாராட்டுகிறார்கள்” என்று கூறுகிறார் விஷால்.

,

Related posts

Director K.S.Ravikumardir Starts Dubbing For Andhagan

Jai Chandran

Actor Vetri starrer Memories team wishes EidMubarak

Jai Chandran

சந்தோஷ் நாராயணனின் நீயே ஒளி’ இசை நிகழ்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend