Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திருப்பதி பிரதர்ஸ் வெளியிடும் “பிகினிங்”

ஆசியாவில் முதல் முயற்சி!
“பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !!
இந்த வித்தியாசமான படத்தை டைரக்டர் என்.லிங்குசாமி உலகமெங்கும் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மூலம் வெளியிடுகிறார். ஏற்கனவே மஞ்சப்பை, கோலி சோடா, சதுரங்க வேட்டை போன்ற படங்களை வெளியிட்டு வெற்றி பெற்று இதன் தொடர்ச்சியாக இந்த #பிகினிங் படத்தை வெளியிடுகிறார்கள்.

ஆசியாவில் முதல் முயற்சி!
“பிகினிங்” ஒரே திரையில் இரண்டு திரைப்படங்கள் !

ரசிகனை வியப்பில் ஆழ்த்தும் புதுமையான சினிமா “பிகினிங்” #Beginning !!
40 நாடுகளில் நடந்த திரைப்பட விழாக்களில் கலந்து கொண்ட படம்.

லெஃப்டி மேனுவல் கிரியேஷன்ஸ் (Lefty Manual Creations) தயாரிப்பில், இயக்குநர் ஜெகன் விஜயா இயக்கத்தில், வினோத் கிஷன், கௌரி கிஷன், சச்சின், ரோகிணி முக்கிய பாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “பிகினிங்”.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரெய்லர் ஒட்டுமொத்த திரையுலகை திரும்பி பார்க்க வைத்ததுடன், ரசிகர்களை பெரும் வியப்பில் ஆழித்தியுள்ளது. ஆசியாவில் முதல்முறையாக ‘ஸ்பிலிட் ஸ்கிரீனில்’ இரண்டு கதைகளை காட்டும் டெக்னிக்கில் இப்படம் உருவாகியுள்ளது.

முதல் முறையாக, வித்தியாசமான, புதுமையான அனுபவம் எனும் வார்த்தைகள் தமிழ் சினிமாவில் வழக்கமாக ஒவ்வொரு திரைப்படத் திலும் சொல்லப்படும் வார்த்தை களாகும், ஆனால் இந்த வார்த்தை களுக்கு உண்மையான அர்த்தத்தை தந்து, முதல் முறை யாக அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது “பிகினிங்” பட டிரெய்லர்.

இப்படத்தில் திரையின் இடது பக்கம் ஒரு கதை விவரிக்கப்படும், வலது பக்கம் மற்றொரு கதை நடைபெறும். ஒரே சமயத்தில் இது நடக்கும். அதே நேரத்தில், பார்வையாளர்கள் குழப்பமடைய மாட்டார்கள். ஒரு டிராமா, ஒரு திரில்லர் முற்றிலும் மாறுபட்ட இரண்டு நிகழ்வுகளை ஒரே நேரத்தில் பார்ப்பது புது வகையான அனுபவமாக இருக்கும்.

நடிகர்கள்

வினோத் கிஷன்
கௌரி ஜி கிஷன்
சச்சின்
ரோகிணி
லகுபரன்
மகேந்திரன்
சுருளி
கே பி ஒய். பாலா

தொழில் நுட்ப குழு

எழுத்து இயக்கம் ஜெகன் விஜயா
இசை சுந்தரமூர்த்தி கே.எஸ்.
ஒளிப்பதிவு  வீரகுமார்
எடிட்டர் சி.எஸ்.. பிரேம்குமார்
கலை கே வி..முருகமணி
தயாரிப்பு நிர்வாகி மாரியப்பன் கணபதிகுரல் பதிவாளr தீலீபன். இரணியன் ஆடியோகிராபி: டோனி ஜெ
மிக்சிங் ப்ளாக் அண்ட் ஒயிட்
ஸ்டுடியோ ஃபயர்பாக்ஸ் ஸ்டுடியோ
வண்ணம்: ராஜேஷ் ஜெ.
வி எஃப் எக்ஸ். முகமது அக்ரம்
மக்கள் தொடர்பு  ஜான்சன்
தயாரிப்பு லெஃப்டி கிரியேஷன்ஸ்  வெளியீடு: மாஸ்டர்ஃபீஸ்
தயாரிப்பாளர்  விஜயா முத்துசாமி
இணை தயாரிப்பாளர் பிரபாகரன். நாகரத்தின  சுப்ரமணி பிரபாகரன். கோபி அண்ணா, பொன்னி பிரபு, அன்பரசி பாபு..

Related posts

சவுந்தர்யா ரஜினி தொடங்கிய உலகின் முதல் குரல் செயலி “ஹூட்” (hoote)

Jai Chandran

மிரள் ( பட விமர்சனம்)

Jai Chandran

விருதுகளை குறிவைத்து பயணப்படும் ” தகவி” திரைப்படம்.!

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend