Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நடிகர் செந்தில் கதையின் நாயகனாக நடிக்கும் முதல் படம்

உரியடி மற்றும் விரைவில் வெளியாக இருக்கும் பன்னிக்குட்டி, கடைசி விவசாயி, சத்திய சோதனை, தர்புகா சிவா இயக்கும் முதல் நீ முடிவும் நீ போன்ற படங்களின் தயாரிப்பாளர் சூப்பர் டாக்கீஸ் சமீர் பரத்ராம் அடுத்ததாக சுரேஷ் சங்கையா இயக்கும் அவரது மூன்றாவது படத்தை தயாரிக்கிறார். சுரேஷ் சங்கையா “ஒரு கிடாயின் கருணை மனு” மற்றும் ப்ரேம் ஜி அமரன் நடிப்பில் வெளியாக இருக்கும் “சத்திய சோதனை” படத்தின் இயக்குனர். தற்போது அவர் இயக்கும் இந்த புதிய படம், ஒரு சமூக பிரச்சினை பற்றி பேச கூடிய படம். தூத்துக்குடி அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் பிப்ரவரி மாதத்தில் தொடங்குகிறது. இந்த படத்தின் முதன்மை கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு, புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் “செந்தில்”  ஒப்பந்தம் ஆகி உள்ளார். இது அவர் இதுவரை நடித்திராத கதாப்பாத்திரத்திம் ஆகும்.


இப் படத்தில் செந்திலுக்கு ஜோடி கிடையாது. பெரும் பாலான கதாபாத்திரங்களுக்கு புதிய முகங்கள் நடிக்க உள்ளனர்.

Related posts

“ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசன்

Jai Chandran

Kasethan Kadavulada Shooting Wraps up

Jai Chandran

Prime Video’s Sweet Kaaram Coffee to Premiere on 6 July

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend