கடந்த 30 வருடத்துக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்கள் எண்ணி வந்தனர். அவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். கடந்த டிசம்பர் மாதம் கட்சி தொடங்கும் அறிவிப்பும் வெளியிட்டார். ஆனால் உடல்நிலை காரணம் காட்டி அரசியலுக்கு வரவில்லை என்னை மன்னித்துவிடுங்கள் என்று பிறகு அறிவித்தார்.
ரஜினியின் இந்த அறிவிப்பை அவரது ரசிகர்கள் ஏற்க மறுத்தனர். ரஜினியை அரசியலில் ஈடுபட வைக்க ரசிகர்கள் இணைந்து போராடுவது என்று முடிவு செய்தனர். இந்த தகவல் ரஜினிக்கு தெரிய வந்தவுடன் அவர் அதிர்ச்சி அடைந்தார். ரஜினியின் மக்கள் நற்பணி இயக்கம் சார்பில் அதன் நிர்வாகி ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில்,’ தலைவர் ரஜினிகாந்த் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் தன்னை நம்பி அரசியலுக்கு வரும் ரசிகர் களை பாதியில் தவிக்க விட எண்ணாமில்லாததாலும் தான் அரசியல் பிரவேசம் செய்ய வில்லை என்ற நிலைப் பாட்டை தெளிவாகக் கூறிய பிறகும் அவரை அரசியலுக்கு வரச் சொல்லி கட்டாயப்படுத் துவது ஏற்புடையதல்ல. போராட்டம் நடத்துவதற்காக சிலர் வசூலில் ஈடுபட்டிருப் பதாகவும் தெரிவந்திருக்கிறது. போராட்டம் நடத்த வேண் டாம். ரஜினி மக்கள் மண்றத் தினர் யாரும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம்’ என்று கூறியிருந்தார்.
ஆனால் ஏராளமான ரசிகர்கள் நேற்று காலை 9 மணி அளவில் தலைவர் ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாட்டினை மறு பரிசீலனை செய்ய வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அறிந்த ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டார் அதில் என்னை அரசியலுக்கு வருமாறு வற்புறுத்தீர்கள். எனது முடிவை அறிவித்துவிட்டேன் நான் அரசியலுக்கு வர மாட்டேன் என்று கூறி இருக்கிறார். அவர் வெளியிட்ட அறிகையில் கூறியிருப்பதாவது.