Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

29 ( பட விமர்சனம்)

படம்: 29

நடிப்பு: விது, ப்ரீத்தி அஸ்வராணி, மகேந்திரன், அவினாஷ், பிரேம்குமார், சிந்து ஷியாம்

தயாரிப்பு: கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம்

இசை: ஷான் ரோல்டன்

ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம்

இயக்கம்: ரத்தினகுமார்

பி ஆர் ஓ : சதீஷ் (S2)

29 வயதாகியும்  நிரந்தரமான வேலை, சுய அடையாளம், திருமணம் என்று எதுவும் இல்லாமல் இருக்கும் சத்யாவுக்கு (விது ) விஜி ( பிரீத்தி அஸ்ராணி ) மீது காதல் வருகிறது. இருவரும் காதலித்தாலும் விஜி ஐஏஎஸ் ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறாள். அதற்கான தேர்வு எழுத தீவிர முயற்சியில் ஈடுபடுகிறார். இதனால் விது மீது அவள் பார்வை குறைகிறது. இதில் கடுப்பான விது அவளை திட்ட கோபத்தில் பிரேக் அப் செய்துவிட்டு செல்கிறாள் விஜி. இதனால் விது வாழ்க்கை திசை மாறி போகிறது. கடைசியில் அவன் கதி என்னவாகிறது என்பதற்கு கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.

வெறும் ஆக்சன் அதிரடி படங்களாக வந்து கொண்டிருக்கும் நிலையில் மென்மையான காதல் கதை வருவதில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்களுக்கு விடை தரும் விதமாக மென்மையான காதல், இனிமையான பாடல்களுடன் வந்திருக்கிறது 29.

புது ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் விது சினிமா ஹீரோவாக இல்லாமல் நாம் தினம் தினம் சாலையில் பார்க்கும் ஒரு சராசரி இளைஞனை போல மனதிற்கு நெருக்கமான வாலிபராக கண்ணுக்கு தெரிவதுடன் நடிப்பிலும் எதார்த்தம் காட்டியிருக்கிறார்.

பிரீத்தி அஸ்ரானியிடம் காதலை சொல்ல தயங்கும் விது கடற்கரையில் ஒரு குறிப்பிட்ட இடத்தை காட்டி “இந்த இடத்தில் நில் என் காதலை சொல்கிறேன்” என்று ஒரு அழகான காதல் பரிமாற்றத்தை வெளிப்படுத்துவது அழகு. இந்த காட்சியை பார்த்த பிறகு கடற்கரைக்கு செல்லும் வாலிபர்கள் அந்த பரிசோதனையை செய்து பார்ப்பார்கள்.

ப்ரீத்தி அஸ்ரானி கதாபாத்திரம் லேஸ் பட்டதல்ல. இந்த பாத்திரத்தில் நடிக்க  துணிச்சல் வேண்டும் அந்த துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை, நடித்திருக்கிறார். அப்படி எந்த காட்சியில் நடித்து விட்டார் என்று கேட்டால், காதலனுக்கு தானே வலிய வந்து சுகம் தருவதும் இதற்காகத்தான் இவ்வளவு ஆட்டத்தை காதலர்கள் போடுகிறார்கள் என்ற ஒரு எதார்த்த உண்மையை உடைக்கும்போது அரங்கில் கைதட்டல் எழுகிறது.

மகேந்திரன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இயக்குனர் ரத்தினகுமார் காதலை மட்டும் இல்லாமல் கருத்து சொல்வதிலும் இனிமையான பாடல்களை வழங்குவதிலும் கவனம் செலுத்தி இருப்பது அவருக்கு கைகுலுக்களை பெற்று தருகிறது.

கார்த்திக் சுப்புராஜ், கார்த்திகேயன் சந்தானம் படத்தை தயாரித்திருக்கின்றனர்.

ஷான் ரோல்டன் இசை பாடல்களில் காதல் தாலாட்டு சேர்த்திருக்கிறது.

மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு குளுமை.

29 – காதலின் உண்மையை உரக்கச் சொல்லும் படம்.

Related posts

PEDDI Hombale first international distribution venture..

Jai Chandran

பாசிச அரசுகள் வீழ்த்த ஆயுதம் ஏந்த வேண்டும் – இயக்குனர் அமீர்

Jai Chandran

5000 டிரக்குகள் முதலாளியான சாமானியன் கதை விஜயானந்த் : ரிஷிகா சர்மா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend