உலக அளவில் புகழ் பெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஹாலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் இன்று நடைபெற்றது. 94வது ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழாவான இந்நிழ்ச்சி கோலாகலமாக வழக்கமான பாரம்பரிய முறைப்படி தொடங்கியது.
ஆஸ்கர் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இல்லாமல் நடத்தப்பட்டு வந்தது. இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். ஆஸ்கர் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை.
இதில் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதை ஹாலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்துக்காக பெற்றார்.

வெஸ்ட் சைடு ஸ்டோரி திரைப்படத்தில் நடித்த அரியானா டிபோஸ் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்றார்.
தி ஐய்ஸ் ஆப் டாமி பேய் என்ற திரைப்படத்தில் நடித்த ஜெஸ்சிகா கேஸ்டைன் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்
டியூன் என்ற படம் சிறந்த ஒள்ப்பதிவு உள்ளிட்ட 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளியுள்ளது. . சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு, சிறந்த பின்னணி இசை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலி ஆகிய 6 பிரிவுகளில் ஆஸ்கர் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.இப்படத்தை டெனிஸ் வில்லெனு இயக்கிஉள்ளார்.
டியூன் படத்துக்கு 2 ஆஸ்கர் விருதுகள் கிடைத்துள்ளன. சிறந்த இசைக்கான ஆஸ்கர் விருதை டியூன் படத்திற்காக 5 இசையமைப்பாளர்கள் பெற்றனர்.சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை டியூன் படத்திற்காக கிரேக் பிரேசர் பெற்று கொண்டார்.
டியூன் படத்திற்காக சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக பேட்ரிஸ் வெர்மெட்டெ மற்றும் சுசன்னா சிபோஸ் ஆகியோ ருக்கும், சிறந்த படத்தொகுப்புக்காக ஜோ வாக்கருக்கும், சிறந்த பின்னணி இசைக்காக ஹேன்ஸ் ஸிம்மருக்கும், சிறந்த ஒலிப்பதிவுக்காக மேக் ருத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பேர்லெட் ஆகியோருக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளன.
சிறந்த ஆவண குறும்படத்துக்கான விருதை ‘தி குயின் ஆப் பேஸ்கட்பால்’ திரைப்படம் வென்றது.
கோடா என்ற திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டது. இது பிரெஞ்ச் படத்தின் ரீமேக் ஆகும்.
சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கார் விருது என்கான்டோ திரைப் படத்திற்கு கிடைத்துள்ளது. சிறந்த துணை நடிகருக்கான விருதினை ‛டிராய் கோட்சர்’ பெற்றார்.
சிறந்த துணை நடிகை விருதினை ‛அரியானா டிபோஸ்’ வென்றார் ‛என்கான்டோ’ படத்திற்கு சிறந்த அனிமேஷன் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடலுக்கானா விருதை ஜேமஸ்பாண்ட் நடத்த “நோ டைம் டூ டை ” க்குகிடைத்துள்ளது.
.தி பவர் ஆப் தி டாக் படத்தை இயக்கிய தற்காக சிறந்த இயக்குனராக ஜேம் கேம்பியன் தேர்வு செய்யப்பட்டுள் ளார்.சிறந்த வெளிநாட்டு திரைப்படத் திற்கான ஆஸ்கர் விருதை டிரைவ் மை கார் படம் வென்றுள்ளது. ஜப்பான் நாட்டு திரைப்படமான இந்த படத்தை யூசுக் ஹமாகுச்சி (ryusuke hamaguchi) இயக்கி உள்ளார்.