Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

துபாயில்  கோடிகளில் முதலீடு ஈர்த்த முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டா லின் துபாய் பயணம் மேற் கொண்டிருக்கிறார். துபாய் சர்வதேச தொழில் கண்காட்சி யில் உள்ள தமிழ்நாடு அரங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின்  திறந்து வைத்தார்.

துபாயில் முதல்வர் ஸ்டாலி னுக்கு அந்நாட்டு அரசாங்கம் வரவேற்பு அளித்தது. மேலும் துபாய் வாழ் தமிழர்கள் லட்சக்கணக்கில் திரண்டு ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
துபாய் அமீரக அமைச்சர்கள், மற்றும் அங்குள்ள தொழில் அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் மு.க.ஸ்டாலின் . அப்போது தமிழத்தில் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தார்.

முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது துபாய் பயணம் பற்றி கடிதம் எழுதி உள்ளார்.
‘வணக்கம் துபாய்.. உமது பேரன்பில் மகிழ்கிறேன்!’ என்ற தலைப்பில் அவர் எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவின் நம்பர்-1 முதல்வர் என்று உங்களில் ஒருவனான எனக்குக் கிடைக்கும் பெருமையைவிட, அனைத்துத் துறைகளிலும் இந்தியாவின் முதன்மை மாநிலம் என்ற பெருமை தமிழ்நாட்டிற்கு கிடைத்திட வேண்டும் என்பதே நமது அரசின் முதன்மை நோக்கமாகும். அ.தி.மு.க.வின் 10 ஆண்டுகால இருண்ட ஆட்சிக்காலத்தில் மிக மோசமான பொருளாதாரச் சீரழிவுக்கும் நெருக்கடிக்கும் உள்ளான நமது மாநிலத்திற்கு, கடந்த 10 மாதகாலமாகத்தான் உதயசூரியன் வெளிச்சத்தால் விடியல் ஏற்பட்டிருக்கிறது. இந்த விடியல் வெளிச்சம், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் பரவிட வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்டுள்ளேன்

முதலமைச்சராகப் பொறுப் பேற்ற பிறகு எனது முதல் வெளிநாட்டுப் பயணம். இது, தமிழ்நாட்டின் முதலீட்டிற்கானப் பயணம். கடந்த இரண்டு நாட்களாகப் பல்வேறு நிகழ்வு களில் பங்கேற்று, தமிழ் நாட்டிற்கான முதலீடுகளுக் குரிய ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன.

இந்தப் பயணத்தைப் பற்றி ஒரு சிலர் அரசியலுக்காகப் பேசி தங்கள் இருப்பைக் காட்டிக் கொள்ள நினைத்தாலும், பொதுமக்களும் உண்மை நிலை அறிந்த மாற்றுக் கட்சியினரும்கூட மனதாரவும் மனதளவிலும் பாராட்டவே செய்கிறார்கள்.

தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு அரணாக விளங்கும் அரசுதான், தமிழ்நாட்டை ஆளும் கழக அரசு. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதிலும் கழக அரசு முனைப்புடன் உள்ளது. அமீரகப் பயணம் அதற்கேற்ற வகையில் முழுமையான வெற்றியைத் தந்துள்ளது.

கடல் கடந்து சென்றேன். கை நிறைய புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் அதற்கேற்ற முதலீடுகளையும் பெற்றேன். திரைகடலோடித் திரவியம் தேடும் தமிழ்ப் பண்பாட்டின் வழியே பயணித்து, மீண்டும் உங்களை சந்திக்கத் தாய்த் தமிழ்நாடு வருகிறேன்!

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

துபாய் பயணத்தின் மூலம் தமிழகத்துக்கு 6 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப் படுள்ளதாக தகவல்கள் வெளி யாகி உள்ளது.

இன்றுடன்  துபாய் பயணம் முடித்துக் கொண்டு அபுதாபி புறப்பட்டார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் . நாளை அங்கு நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொள்கிறார்.

Related posts

Kantara Chapter 1 Completes 100 Days..

Jai Chandran

Vishal and SJ Suryah starrer ‘Mark Antony’ commences shooting

Jai Chandran

“BLOOM” ROMANTIC MUSIC VIDEO..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend