தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் கடந்த ஒரு மாதமாக சீலிடப் பட்டு வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு பாதுகாப்பு போடப்பட் டுள்ளது. சில மையங்களில் லேப்டாப்புடன் வெளிநபர்கள் நடமாடியதாகவும் கண்டெய் னர்கள் வாக்கு எண்ணும் மைய வளாகத்திற்குள்ளு வந்ததாகவும், டிரோன்கள் பறந்தாகவும் பரபரப்பு எழுந்தது. இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் எதிர்கட்சி யினர் புகார் அளித்திருக்கின் றனர்.
தமிழக சட்டசபை தோ்தலுக் கான வாக்கு எண்ணிக்கை மே 2-ல் நடைபெறவுள்ளது. இந்தப் பணியில் அரசு அலுவலா்கள் ஈடுபடவுள் ளனா். வாக்கு எண்ணிக்கை யைப் பார்வையிட வேட் பாளா்களின் முகவா்களும் வரவுள்ளனா்.
இந்நிலையில் வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை திட்டமிட்டப்படி நடக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
வாக்கு எண்ணும் நாளான 2ம் தேதி ஞாயிற்றுகிழமை ஆகும் ஞாயிற்றுகிழமைகளில் ஏற்கனவே கொரோனா அரசு முழு ஊரடங்கு பிறப்பித்திருக் கிறது. இந்நிலையில் 1ம்தேதியும் ஊரடங்கு பிறப்பிக்கலாம் என ஐகோர்ட் யோசனை கூறியது. ஆனால் 1ம் தேதி ஊரடங்கு அவசிய மில்லை என தமிழக அரசு ஐகோர்ட்டில் தெரிவித் திருக்கிறது.
வாக்கு எண்ணும் மையங்கள் முன்பு மக்கள் கூடக்கூடாது. கொரோனா பரிசோதனை செய்துகொண்டு நெகடிவ் என சான்றிதழ் வைத்திருக்கும் கட்சி ஏஜெண்ட்டுகள் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக் கப்படுவார்கள். அவர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் என பல கட்டுப் பாடுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது.
இதுகுறித்து மேலும் தமிழக தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு கூறியதாவது:
தேர்தல் வழிமுறைகளை பின்பற்றி மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும். உடல் வெப்பநிலை 98.6 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் இருந் தால் வாக்கு எண்ணும் மையத் துக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கொரோனா பரிசோதனையில் நெகடிவ் வந்தாலும் உடல்வெப்ப நிலை அதிகமாக இருந்தால் அனுமதி கிடையாது.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியில் 16,387 பேர் ஈடுப்படுத்தப்பட உள்ளனர். அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும்
சில இடங்களில் வாக்கு எண்ணிக்கை மேசைகளில் மாற்றம் இருக்கலாம். அதிக வாக்குச்சாவடிகளைக் கொண்ட தொகுதிகளில் மேசைகளில் எண்ணிக்கையை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
பெரும்பான்மையான வாக்கு எண்ணிக்கை மேசைகள் இறுதி செய்யப்பட்டுவிட்டது. ஒவ்வொரு தொகுதி, அதிகாரி களை பொறுத்து வாக்கு எண்ணும் மேசைகள் மாற்றம் செய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு தான் முடிவு செய்ய வேண் டும். மேலும் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து விவரங்களையும் அரசுக்கு தெரிவித்துள்ளோம்.
இவ்வாறு சத்யபிரத சாகு தெரிவித்திருக்கிறார்.
வாக்கு எண்ணிக்கையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு வாக்கு எந்திரங்களின் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மதிய அளவில் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் தெரியவரும். வாக்கு எண்ணிக்கை விவரங்களை தமிழக தேர்தல் ஆணையம் தனது இணைய தள பக்கத்தில் அவ்வப்போது வெளியிட உள்ளது.
முன்னதாக எந்த கட்சி ஜெயித்தாலும் வெற்றி கொண்டாட்டங்களுக்கு அனுமதி கிடையாது, அதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஓட்டு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்புகள் போடப்பட்டுள்ளன.