உலகமெங்கும் கொரோனா 2ம் அலை வீசி வருகிறது. கோடிக் கணக்கானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். லட்சக்கணக்கானவர்கள் இறந்துள்ளனர். சர்வதேச நாடுகள் கொரோனா பரவலை தடுக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. கொரோனா தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா 2வது அலை கோர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் பலியாகி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக நாளொன்றுக்கு 3 லடசத்துக்கும் அதிகமா னோர் கொரோனா பாதிப்புக் குள்ளாகி வருகின்றனர். பல மாநிலங்களில் மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்ஸிஜன் பற்றாக்குறையும் பல உயிர்களை காவு வாங்கி வருகிறது. இது மக்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கி றது. கொரோனா 2வது அலையிலிருந்து மக்களை காக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிகைகள் எடுத்து வருகின்றன. ஆக்ஸிஜன் தட்டுப்பாடு போக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மேலும் தடுப்புசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தை தொட்டிருப் பதை உலக நாடுகளிருந்து வரும் பிரபல பத்திரிகைகள் மத்திய மோடி அரசு மீது கடும் குற்றாச்சாட்டு களை வைத்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அரசு அமெரிக்கர்கள் யாரும் இந்தி யாவுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொண்டிருப்ப துடன் இந்தியாவில் இருந்து அமெரிக்கர்கள் எவ்வளவு வேகமாக கிளம்ப முடியுமோ அவ்வளவு வேகமாக அமெரிக்க திரும்புவது நல்லது என அறிவுறுத்தி உள்ளது.
மேலும் இந்தியாவில் மருத்துவ உதவிபோதுமான தாக இல்லை. வரைமுறைக்கு உட்பட்டே சிகிச்சை கிடைத்து வருகிறது. அதனால் கிடைக் கும் போக்குவரத்து வசதி களை கொண்டு உடனடி யாக இந்தியாவை விட்டு கிளம்பும் படி அறிவுறுத்தி உள்ளது.
அமெரிக்காவுக்கான நேரடி விமான சேவை தினந்தோறும் செயல்படுகிறது. பாரீஸ் மற்றும் பிராங்பர்ட் வழியே யும் விமானங்கள் அமெரிக்கா வந்தடைகின்றன என டுவிட்டரில் தெரிவிக்கப்பட் டிருக்கிறது.