Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரேக்கப் காதலைச் சொல்லும் இசை ஆல்பம் ‘லவ் சிக்’

காதலுக்கு விளக்கவுரையை பொழிப்புரையை எழுதுவதற்கு ஏராளம் கதைகள், கவிதைகள் . திரைப்படங்கள் உருவாகின்றன.

ஆனால் எதார்த்தத்தில் ஜெயிக்கிற காதலை விட தோற்கிற காதல்கள் தான் அதிகம். எனவே பெரும்பான்மையினரின் ஏக்கக் குரலாகவும் பலரும் அனுபவித்த வலிகளின் குரலாக உருவாகியிருக்கிறது ‘லவ் சிக்’ காதல் நோய் என்கிற காதல் தோல்வி ஆல்பம். அதாவது இதுபிரேக் அப்பால் உடைந்த காதலைப் பற்றி அதன் வலியைப் பற்றிச் சொல்கிற இசை ஆல்பம். இதனை இயக்கியிருப்பவர் நவீன் மணிகண்டன் .இவர்
ஏற்கெனவே ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ என்கிற படத்தை இயக்கியிருக்கிறார்.

அடுத்த திரைப்படக் கனவில் இருக்கும் இவர் கொரோனா பொது முடக்க காலத்தை வீணாக்காமல் அதற்குரிய ஒரு முன்னோட்டமாக இந்த ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார்.
தனது படைப்பூக்கத்தை வெளிப்படுத்தும் வகையில்
‘லவ் சிக் ‘ காதல் நோய் என்கிற இந்த ஆல்பத்தை தனது VHஸ்டார் மேக்கர்ஸ் சார்பில் தயாரித்து இயக்கியிருக்கிறார்.

தொலைக்காட்சிகளில் ‘மகராசி’ ‘அன்பேவா’ தொடர்களில் நடித்து வரும் பாண்டி கமல் இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இவர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்திலும் நடித்தவர் .
கதாநாயகியாக ‘அம்புலி மாமா’ படத்தில் நடித்த ஜோதிஷா நடித்துள்ளார்.

இந்தப் பாடலில் ஒலிக்கும் ஆண் குரலாக விஜய் டிவி சூப்பர் சிங்கர் புகழ் ராஜ கணபதி பாடியுள்ளார். அனீஸ்சாலமன் இசையமைத்துள்ளார். வினோத் படத்தொகுப்பு செய்துள்ளார். இதற்கான படப்பிடிப்பு மகாபலிபுரம் பகுதியில் நடைபெற்றுள்ளது. மகாபலிபுரம் கடற்கரை ,சிற்பங்கள், குடைவரை கோயில்கள் அனைத்தும் இதில் அழகாக பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆல்பத்தை நகைச்சுவை நடிகர் சதீஷ், ரமேஷ் திலக், விஜய் டிவி புகழ் ராமர், அர்ஜுன் ஆகியோர் பார்த்து மகிழ்ச்சி அடைந்து பாராட்டி இருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த உந்துதலின் பேரில் பலரும் இந்த ஆல்பத்தை பார்த்து வாழ்த்தி உள்ளார்கள்.

இதைப் பார்த்துக் கவரப்பட்ட டியோ இசை நிறுவனம் இந்த ஆல்பத்தை வாங்கி யூடியூப் தளத்தில் 27ஆம் தேதி வெளியிடுகிறது.

பிரேக் அப் லவ் பற்றி உருவான ஆல்பமாக இது பேசப்படும் என்று இயக்குநர் நம்புகிறார்.

இந்தக் கொரோனா முடக்க காலத்தில் இந்த ஆல்பம் வெளியாகிறது.வெறும் காதலையே சொல்லிக்கொண்டிருக்கும் மற்ற ஆல்பங்களிலிருந்து இது முற்றாக வேறுபடும் என்று நம்புகிறார்கள் படக்குழுவினர்.

SONG LINK :

Related posts

சுசீந்திரன் தாயார் மரணம்; விஷால் அனுதாபம்..

Jai Chandran

Vikranth plays the role the Antogonist

Jai Chandran

விக்ரம் பிரபு நடிக்கும் புலிக்குத்தி பாண்டி டிரெய்லர் வெளியானது.. ஜன. 15ல் சன் டிவியில் படம் ரிலீஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend