பிரபல நடிகர் மோகன் பாபு மகன் விஷ்ணு மஞ்ச்சு பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து எழுதி நடிக்கும் படம் கண்ணப்பா.
63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் பற்றிய வாழ்க்கை சரித்திர பக்தி படமாக கண்ணப்பா உருவாகிறது
இப் படத்தை முகேஷ் குமார் சிங் இயக்கி இருக்கிறார்.
பான் இந்தியா படமாக உருவாகும் இதில் மோகன் பாபு, விஷ்ணு மஞ்ச்சு, பிரபுதேவா, மோகன்லால், சரத்குமார், அக்ஷய் குமார் , பிரபாஸ் , பிரம்மானந்தம், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், ஐஸ்வர்யா, மது உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நியூசிலாந்தில் நடைபெற்று இருக்கிறது. இதற்காக மொத்த படக்குழுவும் நியூசிலாந்து சென்று அங்கேயே மாதக்கணக்கில் தங்கி பல்வேறு யூனிட்களாக செயல்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
கே
இப்படத்தின் பத்திரிக்கை மீடியா சந்திப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. இதில் பட குழுவினர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் விஷ்ணு மஞ்சு கூறியதாவது:
63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனார் பற்றி படம் உருவாக்க வேண்டும் என்பது எனது நீண்ட நாளைய எண்ணமாக இருந்தது. இதற்காக பல்வேறு புராண இதிகாச புத்தகங்கள் படித்து ஆராய்ச்சிகள் மேற்கொண்டு அதன் அடிப்படையில் கண்ணப்பா கதை உருவாக்கப்பட்டு இருக்கிறது.
கண்ணப்பா நாயனார் தொடக்கத்தில் பக்தி இல்லாதவராக தான் இருந்தார். ஒரு கட்டத்தில் அவர் சிவனடியாராக மாறி அவருக்காக மாமிசம் படைத்தார், கண்களையே தானமாக கொடுத்தார் என்பதெல்லாம் கேட்டு மெய்சிலிர்த்துத்துப் போகும் விஷயங்களாக இருந்தன. இதனை இன்றைய தலைமுறைக்கு சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
கண்ணப்ப நாயனார் பற்றி ஏற்கனவே படங்கள் வந்திருக்கின்றன. கன்னட நடிகர் ராஜ்குமார், சிவராஜ்குமார் போன்றவர்கள் இப்படத்தில் அன்றைக்கு நடித்திருக்கிறார்கள்.
இன்றைய காலகட்டத்தில் இப்படத்தை உருவாக்குவது என்பது பெரும் சவாலாக இருந்தது . ஏனென்றால் புராண கால கட்டத்தை தற்போது காட்டுவது என்பது இயலாத காரியமாக இருந்தது. தற்போதைய உலகம் நவீன மயமாகிவிட்டது. இந்த காலகட்டத்தில் ஆதிகால கட்டத்தை , இயற்கை சூழலுடன் காட்டுவது என்பது இயலாத காரியம். அதனால்தான் இந்தியாவில் பல்வேறு பகுதிகளுக்கு லொகேஷன் பார்க்கச் சென்று அது திருப்தி இல்லாததால் வெளிநாடுகளிலும் பல்வேறு இடங்களில் இதற்காக லொகேஷன் பார்க்கப்பட்டது.
பூமியில் இறைவன் வரைந்த கடைசி ஓவியமாக எனக்கு கண்ணில் பதிந்தது நியூசிலாந்து பகுதி தான். கண்ணுக்கெட்டிய தூரம் பசுமையும் இயற்கை அழகையும் அங்கு என்னால் காண முடிந்தது.
கண்ணப்ப நாயனார் படத்தை உருவாக்குவதற்கு இது போன்ற ஒரு ஆதி காலகட்ட இயற்கை சூழல்தான் முக்கியம் என்பது உணர்ந்து அங்கு எவ்வளவு கோடி செலவானாலும் பரவாயில்லை என்று படக்குழு முழுவதையும் அழைத்துச் சென்று மாத கணக்கில் தங்கி படப்பிடிப்பு நடத்தி முடித்திருக்கிறோம்.
என் தந்தை மோகன் பாபு மீதுள்ள மரியாதை காரணமாகவும் இப்படத்தில் பிரதான வேடங்களில் நடிக்க இந்தியாவின் தலைசிறந்த நடிகர்கள் இப்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்கள்.
மோகன் பாபு, பிரபுதேவா, மோகன்லால், சரத்குமார், அக்ஷய் குமார் , பிரபாஸ் , பிரம்மானந்தம், காஜல் அகர்வால், ப்ரீத்தி முகுந்தன், ஐஸ்வர்யா, மது உள்ளிட்ட எண்ணிலடங்கா நட்சத்திரங்கள் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவன் வேடத்தில் நடித்திருப்பது யார் என்கிறார்கள் . அக்ஷய் குமார் இப்படத்தில் சிவன் வேடமேற்று இருக்கிறார்.
இயக்குனர் முகேஷ் குமார் சிங் படத்தை பக்தி மனம் மாறாமல் பிரமாண்டமாக இருக்கிறார்.
வரும் ஏப்ரல் 25ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரைக்கு வரவிருக்கிறது.
இவ்வாறு விஷ்ணு மஞ்சு கூறினார்.
நடிகர் சரத்குமார் கூறியதாவது:
சமீப காலகட்டங்களாக ஆன்மீக படங்கள் பக்தி படங்கள் வருவது அரிதாகி விட்டது. இதனால் நம் அடுத்த தலைமுறைக்கு நமது புராண இதிகாச கதைகளை சரித்திரங்களை கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. அந்த வகையில் கண்ணப்பா படம் உருவாகி இருக்கிறது.
இயக்குனர் முகேஷ் குமார் சிங் கூறும்போது,”இப்படம் பக்தி பரவசம் படமாக எப்படி எல்லாம் உருவாக வேண்டுமோ அப்படி எல்லாம் உருவாகி இருக்கிறது. இது இந்திய திரையுலகில் ஒரு முக்கியமான படமாக இருக்கும்.
படம் எடிட்டர் ஆண்டனி கூறும்போது,”கண்ணப்பா படப்பிடிப்பு நடந்த நியூசிலாந்து பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார்கள் அங்கு படப்பிடிப்பு நடந்த விஷயத்தை நேரடியாக கண்டு வியந்தேன். திசைகள் நான்கிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் வெவ்வேறு நடிகர்கள் நடித்த காட்சிகள், போர்க்காட்சிகள் போன்றவை படமாக்கப்பட்டுக் கொண்டிருந்ததை நேரடியாக பார்த்து வியந்தேன்.