Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

லோகா சேப்டர் 1 சந்திரா  (பட விமர்சனம்)

Lபடம்: லோகா சேப்டர் 1 சந்திரா

நடிப்பு: கல்யாணி, நஸ்லென், சாண்டி, சந்து சலீம் குமார், அருண்குரியன்

தயாரிப்பு: வேபேரர் பிலிம்ஸ் (Wayfarer Films)

இசை: ஜேக்கஸ் பிஜாய்

ஒளிப்பதிவு: நிமிஷ் ரவி

இயக்கம்: டோமினிக் அருண்

பிஆர்ஓ: நிகில் முருகன்

காட்டுப்பகுதிகளை ஆண்ட அரசன் தான் வணங்கும் கோயிலுக்குள் வரும் இரண்டு ஏழை சிறுமிகளால் கோபமடைந்து அப்பகுதியில் உள்ள கோயிலை எரிப்பதுடன் சிறுமியின் குடும்பத்தினரையும் கொல்கிறான்.அவரிடமிருந்து தப்பிச் செல்லும் சிறுமி சந்திரா (கல்யாணி) நீலி கடவுளின் சக்தி பெறுகிறாள். இதையடுத்து யாரையும் வெல்லும் சக்தி படைத்தவள் ஆவதுடன் யக்க்ஷை எனப்படும் ஜாம்பி போல் மாறுகிறாள். கதை நவீன காலத்துக்கு வருகிறது. ஒரு ஓட்டலில்  வேலை செய்கிறாள் சந்திரா இந்நிலையில் ஆள் கடத்தி உறுப்புகள்  கடத்தும் கூட்டத்துடன் சந்திராவுக்கு மோதல் ஏற்படுகிறது. கடத்தல் கூட்டத்துக்கு  துணையாக இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டருடனும் சந்திராவுக்கு மோதல் ஏற்படுகிறது. சந்திரா ஒரையாள் அத்தனை பேரையும் தீர்த்து கட்டுகிறாள். இதையடுத்து அவளைப் பிடிக்க தனிப்படை வருகிறது. அதன் பிறகு நடப்பது என்ன என்பதற்கு ஆக்சன் அதிரடியுடன் பதில் அளிக்கிறது கிளைமாக்ஸ்.

கமல்ஹாசன் நடித்த விக்ரம் (முதல் பாகம்) படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்தவர லிசி. அவரது மகள் கல்யாணி பிரியதர்ஷன். இவர்தான் லோகா படத்தின் கதாநாயகி. அதுவும் சாதாரண வேடமல்ல யக்க்ஷை, ஜாம்பி, ரத்த காட்டேரி என்று எப்படி வேண்டுமானாலும் இந்த கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டலாம் அப்படியொரு பாத்திரத்தில் கல்யாணி நடித்திருக்கிறார்.

கல்யாணியின்  நடை உடை, பாவனை,  பார்வை போன்ற பாணி எல்லாமே ரொம்பவும் வித்தியாசமானவைகளாக டிசைன் செய்யப்பட்டிருப்பதால் கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக அமைந்து விடுகிறார்.

திடீரென்று ஜாம்பியாக மாறி எதிரிகளை அவர் அடித்து துவம்சம் செய்வது, கோரைப் பற்களால் கடித்துக குதறுவது என ஆக்சன் அதிரடி காட்டியிருக்கிறார் கல்யாணி.

இன்ஸ்பெக்டர் வேடத்தில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி நடித்திருக்கிறார். பார்வையில் வில்லத்தனம் வெளிப்படுகிறது. நடனம் மட்டுமல்ல சண்டைக் செய்யவும்  எனக்கு தெரியும் என்பது போல் ஆக்சன் காட்சிகளிலும் வேகம் காட்டியிருக்கிறார்.

நஸ்லென், சந்து சலீம் குமார், அருண்குரியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இதை ஒரு கற்பனை கதையாகத் தான் பார்க்கலாம். காட்சிகள் எல்லாமே ஆக்ரோஷமாகவும், வேகமாகவும், விறுவிறுப்பாகவும் இருந்தாலும் அதில் கிராபிக்ஸ், வி எப் எக்ஸ் போன்ற தொழில் நுட்பங்கள் ஆட்சி புரிந்திருக்கின்றன. அந்த டெக்னிஷியன்களுக்கு பாராட்டு.

வேபேரர் பிலிம்ஸ் (Wayfarer Films) தயாரித்திருக்கிறது.

ஜேக்கஸ் பிஜாய் இசை காட்சி ஏற்ப  ஒலித்திருக்கிறது.

நிமிஷ் ரவி கேமிரா ஆதிகாலத்துக்கும், நவீன காலத்திற்கும் வித்தியாசம் காட்டி இருக்கிறது.

குழந்தைகளுக்கு, பாட்டி தாத்தா சொல்லும் கதையைத்தான் டோமினிக் அருண்  திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார். சுவை பட சொல்லல், படமாக்கிய விதம், திரைக்கதை  பாணி  ஈர்க்கும். ஆனால் இன்றைக்கும் ஒரு சில யக்க்ஷைகள் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற பீலாவைத் தான் ஜீரணிக்க முடியவில்லை.

படம் முடிந்துவிட்டது என்று நினைத்து ரசிகர்கள் எழுந்த பிறகு மீண்டும் காட்சிகள் தொடரும் நிலையில் துல்கர் சல்மானின் சர்ப்ரைஸ் எண்ட்ரி இன்ப அதிர்ச்சி.

லோகா சேப்டர் 1 சந்திரா –  ஆக்சன் மற்றும் ஜாம்பி பிரியர்களுக்கு பிடிக்கும்..

Review By

K.Jayachandhiran

www.trendingcinemasnow.com

 

 

 

 

 

.

 

 

Related posts

வெளியானது “நவரசா” இரண்டாவது பாடல் !

Jai Chandran

பரத் 50வது படத்தில் வாணி போஜன் ஜோடி

Jai Chandran

பிளாக் மெயில் செய்து ஊதிய உயர்வு பெறுகிறார்கள் – வள்ளுவன் விழாவில் ஆர்.கே.செல்வமணி காட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend