Trending Cinemas Now
சினிமா செய்திகள் விமர்சனம்

விக்ராந்த்  ரோணா ( பட விமர்சனம்) 3டி

 3diபடம்: விக்ராந்த் ரோணா (3டி)

நடிப்பு: கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, நீதா அசோக்

தயாரிப்பு: ஜீ ஸ்டுடியோஸ் மற்றும்  ஷாலினி ஆர்ட்ஸ், ஜாக் மன்ஞ்சு

இசை: அஜ்னீஸ் லோக்நாத்

ஒளிப்பதிவு: வில்லியம் டேவிட்

இயக்கம்: அனூப் பண்டாரி

பி  ஆர்  ஒ:  சுரேஷ் சந்திரா

கம்ருட்டு  ஒரு காட்டு பகுதி கிராமம். அங்கு  பள்ளி  சிறுவர், சிறுமிகள் திடீர் திடீரென்று கடத்தப்பட்டு கொல்லப்படு கின்றனர். பழைய பங்களாவில் இருக்கும் பேய்தான் இந்த வேலையை செய்வதாக ஊர் மக்கள் பேசுகின்றனர். அந்த கிராமத்துக்கு  போலீஸ் இன்ஸ் பெக்டராக வருகிறார் விக்ராந்த் ரோணா (கிச்சா சுதீப்). அவர் ஊர் பெரியவர் மீது சந்தேகப்பட்டு விசாரிக்கிறார்.  போலீஸ் கண்காணிப்பில் இருந்தும் தொடர்ந்து மர்மங்கள் நடந்தேறுகின்றன. இதில் விக்ராந்த்தின் குழந்தையும் பலியாகிறது. உண்மை குற்றவாளிகளை விக்ராந்த் கண்டுபிடித்தாரா?  அல்லது பேய்தான் இந்த கொலைகளை செய்கிறதா? என்பதற்கு பரபரப்புடன் கிளைமாக்ஸ் பதில் கூறுகிறது.

விக்ராந்த் ரோணாவாக   கிச்சா சுதீப் நடித்திருக்கிறார். தொடக்கம் முதலே திகிலும் பரபரப்பும் தொடங்கிவிடு கிறது. .முதல் காட்சியிலே யே ,பெண் ஓட்டி வரும்  கார் மீது பெரிய பொருள் தடார் என விழும்போது திடுக்கிட வைக்கிறது.

விக்ராந்த் ரோணா ஹீரோவாக இருந்தாலும் அவரது விசாரணை வில்லத்தனமாக இருப்பது வித்தியாசம் சாட்டையை சுழற்றி சிலரை விளாசுவதும், ,ஈட்டியால் தாக்க வரும் முரடர்களை தாக்கி பந்தாடுவதும் செமையான ஆக்‌ஷன் சீன்கள்.

மர்ம குகைக்குள் கிச்சா நுழைய நுழைய அவரது மகள் அங்கு போகாதீங்கப்பா என்று எச்சரித்துக்கொண்டிருப்பது அடுத்து என்ன நிகழுமோ என்ற பதற்றத்தை ஏற்படுத்துகுறது.

படத்தில் 3டி காட்சிகள் பிளஸ். கண்களை குத்துவதுபோல் ஈட்டியும், கத்தியும் பறந்து வருமபோது தலையை நாம் தன்னிச்சையாக திருப்பி ஆச்சர்யத்தில் மூழ்கடிக்கிறது. அதேபோல் “ரா ரா ராக்கம்மா..” பாடல் காட்சியில் சுதீப் பாட்டிலிருந்து பீரை பீய்ச்சி அடிக்கும்போதும் மேலே வந்து விழுவதுபோன்ற பிரம்மை ஏற்படுகிறது.  எபெஃக்ட் எல்லாம் நன்றாகத்தான் இருக்குறது ஆனால் படம் முழுவதும் இருளில் படமானது போல் ஒரே டார்க் ப்ளீங். அதை தவிர்த்து இன்னமும் பளிச் சென அமைத்திருந்தால் சீன் தூக்கி நிறுத்தப்பட்டி ருக்கும்.

,பிரமாண்டமான பழமை மாறாத அரங்கு அமைப்புகள் பிளஸ்.

படத்தில் சில கதாபாத்திரங்கள் சஸ்பென்ஸாக செல்வது கிளைமாக்சுக்கு பயன்படுகி றது. பல கதாபாத்திரங்கள் உலவினாலும் முழுக்க இது கிச்சா சுதீப்பின் ஹீரோயிஸத் தை பறைசாற்றும் படம் என்பதை அறுதியிட்டு சொல்லாம்.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும்  ஷாலினி ஆர்ட்ஸ், ஜாக் மன்ஞ்சு தயாரித்திருக்கின்றனர்.

அஜ்னீஸ் லோக்நாத் இசை அதிரடி காட்டியிருக்கிறது. ரா ரா ராக்கம்மா பாடல் விசிலடிக்க வைக்கிறது. நிலா பாடல் ஒன்று குழந்தைகளுக்காகவும் இடம்பெறுகிறது.

வில்லியம் டேவிட் இருளிலும் சுழன்றிருக்கிறது.

அனூப் பண்டாரி கதையை சஸ்பென்ஸ் மாறாமல் கடைசிவரை கொண்டு சென்றிருக்கிறார்.

விக்ராந்த் ரோணா
–  ஆக்‌ஷன் பிரியர்களுக்கு விருந்து

Related posts

Karthi Celebrated Diwali in Dubai labour Camp

Jai Chandran

ஹனு-மேன் ஒரு சர்வதேச திரைப்படம்: இயக்குநர் பிரசாந்த் வர்மா

Jai Chandran

Vishal and SJ Suryah starrer ‘Mark Antony’ commences shooting

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend