தமிழகத்தில் இன்று ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக தமிழக சட்ட மன்ற தேர்தல் நடக்கிறது. 234 தொகுதியிலும் காலை முதலே மக்கள் ஆர்வமாக வாக்கு சாவடிக்கு சென்று வாக்களித்து வருகின்றனர். காலையிலேயே ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் போன்றவர்கள் தங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடியில் வாக்களித்தனர்.
மேலும் நடிகர்கள் விக்ரம், டி.ராஜேந்தர், அருண்விஜய், விஜய் ஆண்டனி, விஜயகுமார், உதயா, யோகிபாபு, பிரசன்னா, கும்கி அஸ்வின், விஷ்ணு விஷால், சேரன், அகத்தியன், கருணாஸ், சூரி, ராஜகுமாரன், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி ராமசாமி. தயாரிப்பாளர் ஈ.ஞானவேல்ராஜா, ஜி.தஞ்செயன், நடிகைகள் ரெஜினா, தேவயானி, சிந்து, பிரியா பவானி சங்கர். கீர்த்தி சுரேஷ், சினேகா. நாசர், மம்மூட்டி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் வாக்குபதிவு செய்தனர்.