தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 6ம் தேதி) நடக்கிறது. காலை 7 மணி முதலே மக்கள் ஆரவமாக வாக்களித்து வருகின்றனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத் உள்ளிட்ட பலர் நடசத்திரங்கள் காலை முதல் தொடங்கி வாக்களித்தனர்.
நடிகர் விஜய் சேதுபதி கோடம்பாக்கத்தில் 12 மணி அளவில் வாக்களித்தார். ஆரி அர்ஜுனா தனது வாக்கை சூளைமேட்டிலுள்ள சென்னை மேல்நிலை பள்ளியில் மதியம் 12 மணியளவில் செலுத்தினார். நடிகர்கள் ஜீவா, அருள்நிதி, நகுல், ஆர்யா, ஸ்ரீமன், சந்தானம் ,வெற்றி, அரிஷ்குமார் வாக்களித்தனர். இயக்குனர்கள் ஷங்கர், மோகன்ராஜ், லேகேஷ்கனகராஜ், சிம்புதேவன், கவுரவ் நராயணன், கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர்கள் உஷா ராஜஜேந்தர், சுரேஷ் காமாட்சி, கே ஜே ஆர் ராஜேஷ் வாக்களித்தனர். நடிகர் சிலம்பரசன் மாலை 4.30 மணி அளவில் திகர் இந்தி பிரசார சபாவில் வாக்குபதிவு செய்தார்.
ரம்யா பாண்டியன் பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் அமைந்துள்ள வேளாங்கண்ணி மெட்ரிகு லேஷன் பள்ளியில் தனது தாய் சாந்தி சகோதரி திவ்யா உடன் சென்று வாக்களித்தார். பாடலாசிரியர் விவேகா, நடிகைகள். நிக்கி கல்ராணி, ஐஸ்வர்யா ராஜேஷ், தான்யா, பிரியங்கா, ஆண்ட்ரியா, ரேகா, ரித்விகா,விஜி சந்திரசேகர், சுவஸ்திகா, ஒளிபதிவாளர் ஷெரிப் தனது வாக்கினை பதிவு செய்தனர்.
இசை அமைப்பாளர்கள் டி.இமான், தாஜ்தூர், வித்யாசாகர் வாக்களித்தனர்.