Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

முதல்வர் பழனிசாமி, மு க. ஸ்டாலின் வாக்குபதிவு செய்தனர்..

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகம் முழுவதும் அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்தனர்.  அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இன்று ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடை பெறுகிறது. கலையிலேயெ மக்கள் ஆர்வமுடன் வந்து வாக்களித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் உள்ள சிலுவம் பாளையம் வாக்குச்சாவடியில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்
திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். பின்னர் மு.க.ஸ்டாலின் தன் மனைவி துர்கா, மகன் உதயநிதி ஆகியோருடன் தேனாம்பேட் டையில் உள்ள எஸ்ஐஇடி கல்லூரியியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து ஓட்டு போட்டார.

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் காரைக்குடி பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாமக நிறுவனர் ராமதாஸ் வாக்களித்தார்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார். கலிங்கப்பட்டி யில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வாக்களித்தார்.


பெரியகுளத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் குடும்பத்துடன் வாக்களித்தார். அவருடன் அவரது மகன் தேனி எம்.பி. ரவீந்திரநாத்தும் தனது வாக்கை பதிவு செய்தார். சென்னை விருகம்பாக்கத்தில் புதுவை கவர்னர் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்.
சிவகங்கை கண்டனூர் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்தி னார் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வாக்களித்தார்.
சென்னை அண்ணாநகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடியில் பாஜக மாநில தலைவர் எல்.முருகன் வாக்களித்தார் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வளசரவாக்கத்தில் வாக்களித் தார்.

Related posts

பார்த்திபனின் இரவின் நிழலுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் முன் உலக அங்கீகாரம்

Jai Chandran

தனுஷின் பிறந்தநாளில் வெளியாகும் சார் / வாத்தி பட டீசர்

Jai Chandran

விக்ரமின் “வீர தீர சூரன்” 2ம் பாக ஆடியோ – டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend