மாஸ்டர் படத்தையடுத்து நடிகர் விஜய், நடிக்கும் படம் பீஸ்ட். இப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படத்தை இயக்கியவர். அனிருத் இசை அமைக்கிறார்.
சன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் கலாநிதி மாறன் தயாரிக்கும் பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். மேலும் யோகி பாபு, செல்வராகவன் உள்ளிட்ட பலர் பலரும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்திலிருந்து ‘அரபிக்குத்து’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதுடன் ,யூடியூப்பில் சாதனை படைத்தது . பின்னர் அனிருத் இசையில் விஜய் பாடிய ‘ஜாலியோஜிம்கானா’ பாடல் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றது. .
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடக்காது என அறிவிக் கப்பட்டு நிலையில் படம் எப்போது ரிலீஸாகும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்தனர்.தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது..வரும் ஏப்ரல் 13ம் தேதி பீஸ்ட் திரைக்கு வருகிறது. இந்த தகவலை பட தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் இன்று அறிவித்துள்ளது.