Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

37 ஆண்டுகள் ஊக்கம் தந்த நாசர்: கார்த்தி வாழ்த்து

நடிகர் நாசர் திரையுலகில் அடி எடுத்து வைத்து 37 ஆண்டுகள் நிறைவடைந் துள்ளது. எந்த கதாபாத்திரங்களானாலும் விமர்சன ரீதியாகவும், மக்களாலும் பாராட்டபடுபவர் நாசர். அந்தளவுக்கு கதாபத்திரங்களில் ஒன்றி நடிக்க கூடியவர்.எந்த கதாபத்திரமானாலும் அதற்கேற்றவாறு நடிக்க முடியும் என்ற நம்பிக்கை கொடுத்தார்.

இந்த வருடம் 37வது வருடத்தில் அடியெடுத்து வைக்கும் நடிகர் சங்க தலைவர் நாசருக்கு , நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

“37 ஆண்டுகளாக தொடர்ந்து எங்களை ஊக்கப்படுத்தியதற்கு நன்றி நாசர் சார்.

‘மாயன்’, ‘பேபி’ , ‘ குப்புசாமி , ‘பத்ரி’ போன்ற உங்களது காதாபாத்திரங்கள் இன்று வரை நம்மிடையே இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மகத்தான பணிக்கு வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்”.

இவ்வாறு நடிகர் நாசரைப் பற்றி கார்த்தி குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இலங்கை மக்கள் புரட்சி: அதிபர் கோத்தபய தப்பி ஓட்டம்

Jai Chandran

“ரமணி Vs ரமணி” திரைத்தொடர் மீண்டும் புதிய சீசன்

Jai Chandran

Aishwarya Rajesh Appeals to one and all

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend