Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினி மகள் ஐஸ்வர்யா இந்தி படம் இயக்குகிறார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர்  3 என்ற படம் மூலம் படம் முலம் இயக்குனராக அறிமுகமா னார். பின்னர்  ”வை ராஜா வை” என்ற படத்தை இயக்கினார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழிகளில் இசை ஆல்பம் இயக்கி வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த், மோகன்லால், மகேஷ்பாபு போன்ற பிரபலங்கள் அவருக்கு  வாழ்த்து கூறினர்.
சில வருடங்களுக்கு முன் நடிகர் தனுஷை ஐஸ்வர்யா காதலித்து மணந்தார், இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். சமீபத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
இதையடுத்து ஐஸ்வர்யா திரை படங்களில் கவனத்தை திருப்பி உள்ளார். சமீபத்தில் நடிகர் லாரன்ஸை சந்தித்து பேசினார் ஐஸ்வர்யா அப்போது லாரன்ஸ் ஹீரோவாக நடிக்கும் படத்தை  இயக்க ஐஸ்வர்யா பேச்சு நடத்தியாக கூறப்பட்டது.  தந்தை ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்க வேண்டும் என்பது ஐஸ்வர்யாவின் கனவாக உள்ளது.
இதற்கிடையில் இந்தி படம் இயக்கவிருக்கிறார் ஐஸ்வர்யா என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதுபற்றி பிரபல இந்தி பட தயாரிப்பாளர் மீனு அரோரா
ஐஸ்வர்யா இயக்கும் படத்தின் ஆரம்பகட்ட பணிகளை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்தார். படத்துக்கு ”ஒ ஷாதி சல்” என்று பெயர் வைத்து இருப்பதாக தெரிகிறது. உண்மை சம்பவத்தை மையாக வைத்து இப்படம் உருவாகிறது.
அமிதாப்பச்சன் நடித்த ஜூண்ட் படத்தை தயாரித்தவர் மீனு அரோரா என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

SIFPA convened its second meeting in Hyderabad..

Jai Chandran

Vijay’s Beast Team Wishes Cinematographer Jani

Jai Chandran

புளியந்தோப்பு கே.பி. பார்க் பன்னடுக்கு குடியிருப்பு தொட்டாலே உதிர்கிறது: கமல் புகார்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend