தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர் . லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படம் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளது. தியேட்டர் திறப்பு முழுமையான அளவில் நடந்த பிறகே படம் வெளியாக உள்ளது.
தீபாவளி தினத்தில் ரசிகர்கலுக்கு விருந்தாக மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. விஜய்யின் அதிரடு ஆக்ஷனுடன் கூடிய டீஸர் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது