சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது அண்ணத்த படத் தில் நடிக்கிறார். சிவா இயக்குகிறார். நயந்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் தடை பட்டிருந்தது. கொரோனா தளர்வு அறிவிக் கப்பட்ட பிறகும் படப்பிடிப்பு இன்னும் தொடங்காமல் உள்ளது. விரைவில் படப்பிடிப்பு தொடங்குவதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது.
தீபாவளி தினத்தில் வழக்க மாக குடும்பத்துடன் வருடா வருடம் ரஜினிகாந்த் பட்டு வேட்டி, பட்டு சட்டை உடுத்தி அனைவருக்கும் தீபாவளி வாழ்த்து பகிர்வார். இன்று அவர் புத்தாடை அணிந்து வீட்டு வாசலில் பட்டாசு வெடித்து தீபாவளி கொண் டாடினார்.
ரஜினி பட்டாசு வெடிக்கும் படம் வைரலாகி வருகிறது.
வரும் 2021ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தனிகட்சி தொடங்கி தேர்த லில் போட்டியிடுவேன் என்று ரஜினிகாந்த் அறிவித்தார். ஆனால் இன்னும் கட்சி தொடங்கவில்லை. சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை யில் எனது அரசியல் நிலைப் பாடு பற்றி விரைவில் தெரிவிப்பேன் என்றார். ரஜினியின் அடுத்த அறிவிப்பு இதுவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.