பிரபல நடிகரும் இசையமைப்பா ளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா. இவர் இன்று காலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார். இது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி சென்னை ஆழ்வார்பேட்டை டிடிகே சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மனைவி பாத்திமா. இவர் திரைப்பட தயாரிப்பாளர். இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் மீரா சென்னையில் உள்ள சர்ச் பார்க் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று தந்தை விஜய் ஆண்டனி அறையில் படுத்து தூங்கினார் மீரா. இன்று ( 19 ஆம் தேதி ) அதிகாலையில் பார்த்த போது மீரா மின்விசிறியில் அவர் தூக்கிட்டு தற்கொலை கொண்டது தெரிய வந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் வீட்டு பணியாளர் உதவியோடு உடலை கீழே இறக்கி கார் மூலம் தனியார் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
பின்னர் பிரேத பரிசோதனைக்கு மீரா உடல் அனுப்பி வைக்கப் பட்டது. அதன் பிறகு மீராவின் உடல் டிடிகே சாலையில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப் பட்டு, இறுதி அஞ்சலிக்காக வைக்கப் பட்டது. மீரா உடலை கண்டு விஜய் ஆண்டனி, தாய் பாத்திமா கதறி அழுதனர். அவரது உடலுக்கு நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.
இது சம்பவம் தொடர்பாக தேனாம் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளியில் மீரா பொருளாதார பாடப் பிரிவு படித்து வந்தார். பேட்மிட்டன் விளை யாட்டில் ஆர்வம் கொண்ட மீரா நேற்று விடுமுறை என்பதால் தோழிகளை சந்தித்து விட்டு வந்ததாக தெரிகிறது.
கடந்த ஆறு மாதமாக தனியார் மருத்துவமனையில் மன அழுத்தத்திற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
மன அழுத்தத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.