இயக்குநர் பாரதிராஜா இயக்கிய ‘என் உயிர் தோழன்’ படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பாபு. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை ஈட்டினார்.
விக்ரம் இயக்கிய பெரும்புள்ளி மேலும் தாயம்மா, பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
‘மனசார வாழ்த்துங்களேன்’ என்ற படத்தில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அவரது முதுகெலும்பு உடைந்தது. அதற்கான சிகிச்சை எடுத்தும் பலனில்லை. கடந்த 30 வருடங்களாக அவர் படுத்த படுக்கையில் கிடநதார். அவரின் தாயார்தான் உடனிருந்து அவரை கவனித்து வந்தார். சில வருடங் களுக்கு முன்பு இயக்குனர் பாரதிராஜா நேரில் சென்று பாபுவை பார்த்துவிட்டு வந்தார்.
கடந்த சில மாதங்களாக பாபுவின் உடல்நிலை மோசமனது தனியார் மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று உடல் நிலை மோசமடைந்தது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனில்லாமல் பாபு இன்று மரணம் அடைத்தார்.